இந்தியன் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!..

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு வேண்டுமா, தகுதியும் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பியுங்க. இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் ஆபிசர்  பணிகளுக்கு பிஇ/பிடெக், எம்எஸ்சி, எம்பிஏ, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணியின் பெயர்
ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிஸர்
பணியிடங்கள் மொத்தம்
145
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு
சம்பளம்
ரூபாய் 23,700-66,070
விண்ணப்பிக்க கடைசி தேதி
02/05/2018
வயது வரம்பு
20வயது முதல் 28வயது வரை
பணியிடம்
இந்தியா முழுவதும்

பணியிட விவரங்கள்:  
ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் ஸ்கேல் நெம்பர்-1 பணியிடங்கள் துறைவாரியாக மாறுபடும்.
அஸிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடம்-01
சீப் மேனேஜர் பணியிடங்கள்-09
மேனேஜர் பணியிடங்கள்-13
சீனியர் மேனேஜர்-08


இன்பர்மேசன் செக்கியூரிட்டி செல் பணியிடங்கள்: 
அஸிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடம்-01
மேனேஜர்-05
சீனியர் மேனேஜர்-01

டிரெசரரி துறை பணியிடங்கள்:
மேனேஜர் எம்பிஏ படித்தவர்கள் பணியிடங்கள்-02
மேனேஜர் சிஏ படித்தவர்கள் பணியிடங்கள்-04
சீனியர் மேனேஜர் எம்பிஏ பணியிடங்கள்-12
சீனியர் சிஏ படித்தவர்கள் பணியிடங்கள்-03

பாதுகாப்புத்துறை பணியிடங்கள்: 
மேனேஜர் பணியிடங்கள்-55 
சீனீயர் பணியிடங்கள்-20

திட்டமிடுதல் துறை பணியிடங்கள்: 
மேனேஜர் பணியிடம்: 01
அஸிஸ்டெண்ட் மேனேஜர்-01
இவ்வாறு இந்தியன் வங்கியில் பல்வேறு துறைவாரியாக பணியிடங்கள் காலியாகவுள்ளன. 

விரிவான கல்வித் தகுதி மற்றும் அனுபவம்: 
இந்தியன் வங்கியில் பணியிடம் பெற ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு பெறிருக்க வேண்டும் அத்துடன் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் என்பதால் துறைவாரியாக படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. மேனேஜர் பணியிடங்களில் எம்பிஏ பட்டப்படிப்பும், சிஏ படிப்பு முடித்தவர்களுக்கும் முன்னுரிமை மாறுபடுகின்றது. அவ்வாறே சில பணியிடங்களுக்கு ஏதேனும் பட்டப்படிப்பு படித்திருத்தலுடன் முதுகலை பட்டமும் படித்திருக்க வேண்டியது  தேவையாகவுள்ளது. 

இந்தியன் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் பெற அனுபவங்களும் அந்த பணியிடங்களுக்கு ஏற்ப 3 முதல் 10 வருடங்கள் வரை தேவையாகவுள்ளது. மேலும் அவை துறைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றது அதனை முழுமையாக அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

தேர்வு முறை: 
இந்தியன் வங்கியில் பணிக்கு தேர்வானது விண்ணப்பித்தவர்களுள் தகுதியானவர்கள் சார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூ மூலம்  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

பொது விதிமுறைகள்: 
இந்தியன் வங்கியில் பணிவாய்ப்பு பெற  அனுபவ சான்றிதழ்  கொடுக்க வேண்டும். இறுதி முடிவு வங்கியே எடுக்கும். 

குறிப்பிட்ட ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்பு இப்பணி பெற தகுதிகள் பெற்றிருப்பதை உறுதிசெய்து விண்ணப்பிக்க வேண்டும். 

கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் மொபைல் எண்கள் சரியாக இருக்க வேண்டும். வங்கியில் சமர்பிக்கபிட்ட ஆவணங்களில் எதேனும் மாற்றங்கள் இருந்தாலோ, வங்கி தொடர்புகொள்ளும் போது ஏதேனும் மாற்றம் ஏற்ப்பாட்டாலோ அதற்கு  வங்கி பொறுப்பல்ல. அதனால் முகவரி மற்றும் தொடர்பு எண்கள், இமெயில் அனைத்தையும் சரியாக சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பம்: 
இந்தியன் வங்கியில்   வேலைவாய்ப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க 10/04/2018 முதல் 02/05/2018 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  அதிகாரப்பூர்வ தளத்தில், கேரியர் பகுதியில் அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/.எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும். மேலும் பொதுபிரிவினர் மற்றவர்கள் ரூபாய் 600 செலுத்த வேண்டும். 

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் கிளிக் செய்து படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வட்டமிட்டு காட்டியுள்ளோம்.

Post a Comment

0 Comments