கந்த சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி நாட்களையும் குறிக்கும். அதே போல் தீபாவளி முடிந்த அமாவாசை பின் வரும் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாள் விரத நாட்களை மகா சஷ்டி காலங்காலமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. வருட வருடம் கந்தா, வேலாவா, அரோகரா என பக்தர்கள் படை சூழ கோலகலமாக கொண்டாடப்பட்டது.
இன்று ஆறாம் நாள் கொண்டாட்டம், திருசெந்தூரில் சூரனை அழிக்க, முருகபெருமான புறப்படும் நேரம் வந்துவிட்டது. இன்று 430 மணிக்கு சூரசம்ஹாரம் தொடர்ங்குகின்றது. முக்கிய சேனல்களில் லைவாக ஒளிப்பரப்புகின்றனர்.
3000 கணக்கான பாதுகாப்பு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். திருவிழாவில் குழந்தைகள் காணமல் போவதை தடுக்க அவர்களுக்கு பேண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையம், பஸ்டேண்ட் போன்ற இடங்களில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இலவசமாக சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயலாற்றுகின்றது.
நல்லிரவில் தொடங்கி பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பக்தர்கள் கூட்டம் திரளாக வந்த வண்ணமுள்ளனர்.
எங்கு பார்த்தாலும் அரோகரா, வேலா, வேலவா, திருச்செந்தூர் முருகனுக்கு ஜே என்ற கோசம் விண்ணைப் பிழந்தவண்ணம் உள்ளது.
5 நாட்கள் விரதம் இருந்தோர் இன்று ஆறாம் நாள் சூரசம்ஹாரம் பார்த்தபின்பு 6 மணிக்கு சூரசம்ஹாரம் முடியும், குளித்து முடித்து பூஜை செய்து பால் அருந்தலாம்.
நாளை முருகனின் திருகல்யாணம் பார்த்து. திருமண விருந்து போல் வீட்டில் படைத்து முருகனுக்கு தயிர் சாதம் சூடாக படைக்க வேண்டும். பின் சாதம், சாம்பார், கூட்டு, அப்பளம், பாயசம். ஆகிய அனைத்தும் அவருக்கு படைத்து நாமும் உண்ணலாம். அனைவரும் முருகன் அருள் பெற்று வளமோடு வாழ்க.
0 Comments