தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் மேலும் 20 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடும் எனவும் வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழகத்தின் 80 இடங்களில் கனமழை பெய்துள்ளது என அவர் வெளியிட்ட தகவல் மூலம் அறிய முடிகின்றது.
 
தமிழ்நாட்டில் மேலும் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, கோவை, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 20 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல்கள் கிடைக்கின்றன. 


 
அக்டோபர் 30, 31 ஆகிய நாட்களில், குமரி கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம்  எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 19 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன்  வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
20 மாவட்டங்களில் பெயர்கள் வெளியட்ப்பட்டுள்ளது ஆகையால் இத்தகைய  மாவட்டத்தில் நீர்த்தேக்கம் ஆகியவற்றை அகற்றவும், டெங்கு போன்ற காய்ச்சல் தடுப்பை உண்டாக்க   மாவட்ட நிர்வாகத்தின் சுகாதரத்துறை கவனித்து வருகின்றது. 


Post a Comment

0 Comments