இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா பக்கம் சென்று வலுவிழந்த நிலையில், அரபி கடலில் புதிய புயல் உருவாகியது.
வடகிழக்கு பருவமழை காரணமாக உருவான 'கியார்' என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக தட்பவெப்ப நிலை மாறி, மூன்று நாட்களாக மழை குறைந்தது. இந்த புயல் அடுத்த சில நாட்களில் ஓமன் கரைப்பகுதியை நோக்கி நகரும்.
வங்க கடல் மற்றும் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடையும் என தகவல்கள் கிடைக்கின்றன.
மழை பாதுகாப்பு:
மழைக் காலம் துணிகளை அதிகபட்சம் பிழிந்து உளரவிடவும். வீட்டைச் சுற்றி மழை நீர் தேக்கம் தவிர்க்கவும். மழைக் காலத்தில் குடை, ரெயின் கோட் எங்க சென்றாலும் எடுத்துச் செல்லுங்கள்.
உணவில் நோய் தடுப்பு முறையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் அலுவலகம், பள்ளி செல்பவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும்.
மழை நீரை சேகரிக்க வேண்டியது மிக முக்கியமானது ஆகும்.
மழை நீரை சேகரிக்க வேண்டியது மிக முக்கியமானது ஆகும்.
0 Comments