எல்ஐசி காப்பீடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தேசிய காப்பீடு நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும்  உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

இந்திய அளவில்  அதிக கிளைகளுடன் எல்ஐசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மெகா காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை  8 000 ஆகும்.

இந்தியாவின் வடக்கு மண்டலம், வடக்கு மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், தெற்கு மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் என மொத்தம் 8 மண்டலங்கள் வாரியாக காலிப்பணியிடங்கள்  நிரப்படுகின்றன. 
 


தெற்கு மண்டலத்தின் கீழ் சென்னை 1 மற்றும் 2, கோவை, எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருவனந்தபுரம், திருச்சூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய பணியிடங்களுக்கு  தகுதியுள்ள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள்  மாவட்ட வாரியான காலியிட விவரங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம்.

கல்வித்தகுதி:
கல்வித் தகுதியாக எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சிப் பெற்றவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். 

வயது வரம்பு:
 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்:
எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் 600 ரூபாய் ஆகும். விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க தொடக்க நாள்: 17 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1 அக்டோபர் 2019

தேர்வுக்கான  ஹால்டிக்கெட் ஆன்லைனில்  டவுன்லோடு செய்ய  அறிவிக்கப்பட்டுள்ள தேதி 15 அக்டோபர் முதல் 22 அக்டோபர் 2019 வரை ஆகும்.

முதல்நிலைத்தேர்வு நடைபெறும் நாள்: 21,22 அக்டோபர் 2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
 
அதிகாரப்பூர்வ தளத்தின் லிங்கினை பெற இங்கே கிளிக் செய்யவும் http://licindia.in  
 
எல்ஐசி பணிக்கான அறிவிப்பினை பெற இங்கே கிளிக் செய்யவும்.
http://licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments