ஐபிபிஎஸ்சின் வங்கிகளுக்கான கிளாரிக்கல் வேலை வேண்டுமா!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஐ.பி.பி.எஸ்சின்  அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி,பி.எஸ் அமைப்பு  ஆண்டுதோறும் நடத்தும் எழுத்துத்தேர்வானது . 2020-21 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களுக்கு வங்கி கனவை கொண்ட தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஐ.பி.பி.எஸ்சின்  காலியாகவுள்ள மொத்த கிளரிக்கல் பிரிவு பணியிடங்கள் எண்ணிக்கை  12,570 ஆகும்.

மொத்தம் 17 பொதுத்துறை வங்கிகளுக்கான பணியிடங்கள் நிரப்படுகின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும்  1,379 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது தவிர மேற்கு வங்கம் 1,340, மஹாராஷ்டிரா 1,257, உத்தரபிரதேசம் 1,203, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலுள்ள வங்கிகளுக்கும் பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.  அந்தந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு, வயது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி:
ஐ.பி.பி.எஸ் பணிக்கு  ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி:
வங்கிப்பணிக்கு  பிரிலிமினரி, மெயின் என இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு டிசம்பர் 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு 2020 ஜனவரி மாதம் 19 ஆம் தேதி  நடைபெறும்.

தேர்வு மையம்:
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட 11 நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பம்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், செப்டம்பர் 17 முதல்  அக்டோபர்  19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணமாக பொதுபிரிவினர்  ரூ. 600 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100 செலுத்தினால் போதுமானது ஆகும்.

மேலும் தேவைப்படும் விவரங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்: www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_IX.pdf

மேலும் படிக்க:

எல்ஐசி காப்பீடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments