இந்தியா 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது இந்தியா 100 பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ்வர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். இந்தியா ஒலிம்பிக்கில் ஒளிர 2032 ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமா, அட பாவமே என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது.
2026 இல் இந்தியா 100 பதக்கங்களை வெல்ல இலக்கு மேற்கொண்டு தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே ஒலிம்பிக்கில் சீனாவைப் பார்த்து நாம் பல் இழிக்கின்றோம். இன்னும் 12 ஆண்டுகள் கழித்து நாம் 100 இல் நிற்க சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் எல்லாம் பதக்கங்களில் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். இதுவரை இருந்த தொய்வினை போக்கி இந்தியாவை சிறப்பாக வழிநடத்திச் சென்றால் தான் இளைஞர்கள் அதிக சாதனைப் படைக்க முடியும்.
திறன்படைத்த இளைஞர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கான அங்கிகாரம், பயிற்சி, வசதிவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் நாம் விளையாட்டை முன்னிருத்தி நாட்டு மாணவர்களை ஆற்றல் மிகுந்தவர்களாக மாற்ற வேண்டும். தேசிய விளையாட்டு கொள்கை உருவாக்கி தேச மாணவர்களை திறன் மிக்கவர்களாக்க வேண்டும்.
2004 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜீவ்வர்த்தன் சிங் ரத்தோர், காமன் வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம், ஆசிய கேம்ஸில் வெள்ளி, வெண்கலம் போன்ற பல்வேறு பதக்கங்களை வென்றவர் ராஜீவ்வர்த்தன் சிங் ஆவார்.
ஓய்வுக்கு பின் பாஜக கட்சியில் இணைந்தவர் ராஜீவ்வர்த்தன் சிங் ரத்தோர் மோடி ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சரானார்.
ஒலிம்பிக்கில் 100 பதக்கங்கள் வெல்ல கேலோ இந்தியா:
கடந்த 5 ஆண்டுகால மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்துடன் விளையாட்டிலும் முன்னேற்றம் தென்படுகின்றது. தற்போது மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கு என்பது மிக நீண்ட காலம் கொண்டதாகவுள்ளது. தேசிய விளையாட்டு கல்வி வாரியத்தின் திட்டங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். வாரியத்தின் கீழ் அறிவிக்கப்படும் சலுகைகள், திறன் பயிற்சிகள், உதவிகள் அனைத்தும் முறையாக சென்றடைகின்றதா என்பதை கண்கானிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
மோடி அரசின் திட்டங்கள் சிறப்பு மிக்கதாக உள்ளது. ஆனால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் பயனாளர்களை முறையாக சென்றடைகின்றதா. அது சார்ந்த கண்கானிப்புகள் அரசுக்கு அவசியம் தேவையாகும்.
இதன் மூலம் வரும் 2032வத் ஒலிம்பிக் தொடரின் போது இந்திய கிட்டத்தட்ட 100 பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வரும் 2032வத் ஒலிம்பிக் தொடரின் போது இந்திய கிட்டத்தட்ட 100 பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக ரத்தோர் தெரிவித்துள்ளார்.
0 Comments