ராம நவமி 2020



மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ராம அவதாரம். ராமர் பிறந்த தினத்தை நாம் அனைவரும் ராமநவமியாக நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறோம். 



பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் ஒன்பதாம் நாள் வரும் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ராமநவமியாக கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இருக்கும் பெருமாள் கோவிலில் விழா மிகவும் கோலாகலமாக இருக்கும். 



அயோத்தி மற்றும்  கைலாஷையை ஆண்ட தசரத மன்னரின் மகனாக ராமபிரான் அவதரித்தார். பல இடங்களில் ராமநவமிக்கு முன்னரே 10 நாட்கள் விரதம் இருப்பார்கள். 

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கும் உள்ள கோயில்,  தேவாலயம், மசூதி உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ராமநவமி பெரிய அளவில் கோயில்களில் பொதுஇடங்களில் கொண்டாட வாய்ப்புகள் குறைவுதான். நாம் வீட்டிலேயே ராமநாமத்தை சொல்லி பூஜை செய்து வழிபாடு நடத்தி ராம நவமியை கொண்டாடலாம். 

வீட்டில் ராமநவமி கொண்டாடுவதற்கான முறை:



கோவில்களுக்கு சென்று ராமரை வணங்க முடியாத காரணத்தினால் நாம்  வீட்டிலேயே இராமரை வழிபட்டு அவரின் அருளைப் பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1. ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீராம் என எளிமையான ராம ஸ்தோத்திரத்தை சொன்னாலே போதும் நமக்கு அருள் கிடைக்கும். 

2. ராமாயண கதைகளையும் ராமனின் சிறப்புகளையும் ராம நவமியில் படிப்பது மிகச் சிறந்தது. 

3. ராமர் பாடல்களைப் பாடலாம். 

4. ஸ்ரீராமரின் சிலை அழகான ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்களால் தயார் படுத்தி அதன் முன் வழிபாடு செய்வது நல்லது. 

பூஜை செய்யும் முறை:

1. காலையில் எழுந்ததும் குளித்து சுத்தமாகி பூஜைக்கு தேவையான பூக்கள், மாலை தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் வெற்றிலை, பாக்கு ஆகியவை எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். 

2. முக்கியமாக துளசி இலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு மிகவும் அவசியமானது. 

3. பிரசாதமாக நீர் மோரும் ஸ்ரீராமருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். அது மட்டுமில்லாமல் நமக்குத் தெரிந்த இனிப்பு பலகாரங்களையும் தயார்செய்து பூஜைக்கு வைக்கலாம். எந்த ஒரு பூஜை செய்தாலும் இறைவனுக்கு முதலில் ஏதேனும் ஒரு பிரசாதத்தை வைத்து படைத்தப் பிறகு வழிபாட்டை தொடங்கவேண்டும். 

4. பலகாரங்கள் செய்ய முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் பொரிகடலை சர்க்கரையோ பாலில் சர்க்கரையை கலந்து வைப்பது நல்லது. 

ராம அவதாரத்தின் நோக்கமும் கதையும்:



இலங்கையை ஆண்ட இலங்கைஸ்வரன் ராவணன் பிரம்மனிடம் தேவர்கள் தேவ தூதர்களால் கொல்ல  முடியாத வரத்தை பிரம்மனிடமிருந்து பெற்றிருந்தார். அதனால் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற எண்ணத்தில் மக்களை மிகவும் பயமுறுத்தியும்  அச்சுறுத்தியும் வைத்திருந்தான். அதுமட்டுமின்றி பல கொடுமைகளையும் செய்து வந்திருக்கிறான். இவனிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தேவர்கள் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள். இதையடுத்து மன்னன் தசரதனின் மனைவி கவுசல்யாவிற்கு மகனாக ராமர் அவதாரம் எடுத்தார். அந்த தினத்தை தான் நாம் ராமநவமி யாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றோம். 

ராவணனை அழித்து சீதையை மீட்டதுமில்லாமல் இலங்கை மக்களை  அவனின் கொடுமையில் இருந்து மீட்டெடுத்தார் என நம்பப்படுகிறது.

அப்படிப்பட்ட அருள் பொருந்திய ராமனின் அவதார தினத்தை நாமும் அவன் பெயர்சொல்லி உச்சரித்துக் கொண்டாடினால் நன்மையும் நலன்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெற்று வாழ்வோம் என்று கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments