கபில்தேவ் ஒரு தலைசிறந்த வீரர் !
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் கபில்தேவ் .
அவர் ஒரு சிறந்த கேப்டன் மட்டுமல்ல மிகச்சிறந்த விளையாட்டு வீரரும் கூட !!
ஏனென்றால் அவர் விளையாடிய நாட்களில் ஒருமுறைகூட அவர் ஓய்வு எடுத்ததே இல்லை அந்த அளவிற்கு அவருடைய பிட்னஸ்!
அவர் கிரிக்கெட் விளையாடிய காலங்களில்
" ஆல் ரவுண்டர் " எனப்படும் பன்முகத் திறமை கொண்ட வீரர்கள் மிக மிக குறைவு .
நமது இந்திய அணியில் இடம்பெற்ற இன்றியமையாத ஆல் ரவுண்டர் கபில்தேவ் !
அவருடைய பந்துவீச்சு , பேட்டிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் அவருடைய தனி முத்திரையை பதித்துள்ளார்.
கபில்தேவ் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற போது இன்றைக்கு உள்ளது போல வசதிகள் இந்திய அணிக்கு இல்லை.
இந்திய அணி உலகக்கோப்பை விளையாட லண்டன் சென்றபோது கூட அவர்களது துணியை அவர்களே துவைத்துக் கொண்டார்களாம்.
அதிலும் கபில்தேவ் விழுந்து தடுப்பதால் அவருக்கு எல்லா துணியும் கரையாகி விடுமாம்...
இதுவரை விளையாடிய இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர்களில் இவர் தான் மிகக் குறைந்த அளவு "நோ பால்" வீசி உள்ளாராம் ! ஏன் கிட்டத்தட்ட அவர் நோ பாலே வீசவில்லை என்பது இவருடைய சாதனை !!
அவர் ஒரு தலைசிறந்த வீரர் மட்டுமல்ல சிறந்த தன்னம்பிக்கையான பேர்விழி !
எந்த தருணத்திலும் அவருடைய தன்னம்பிக்கையை கைவிடவே மாட்டார் …
ஆட்டத்தின் கடைசி பந்து வரை போராடி பார்த்துவிட வேண்டுமென்பது அவருடைய குணம்!
அவருடைய இத்தகைய குணத்திற்கு அவர் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக அவர் குவித்த 175 ரன்கள் தான் சாட்சி !
ஆம் எந்த வீரருக்கு அப்படி ஒரு தன்னம்பிக்கை வரும்?
17 ரன்கள் சேர்க்கும் முன்பே 5 விக்கெட்கள் இழந்த போது ...
தனி ஒருவராக போராட கபிலை விட்டால் அன்று வேறு யாரால் முடிந்திருக்கும்?
இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது கூட நாங்கள் 1983 இல் உலகக் கோப்பையை வென்று வந்தது விட இவர்கள் வென்றது சிறந்தது என்று அவர் கூறிவிட்டார் இந்த மனசு வேறு யாருக்கு வரும்?
அத்தகைய பெருந்தன்மை கொண்டவர் கபில் தேவ்.
இன்று கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது அவர்தான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா !!
ஆம் அவர் ஆரம்பித்து வைத்த இசிஎல் தான் இன்றைய ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னோடி !!
இன்றும் எதற்கும் அஞ்சாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் திறமை கொண்டவர் கபில்தேவ் அவரைப் போல் ஒருவரை பார்ப்பது அரிது.
அன்றும் இன்றும் என்றும் கபில்தேவ் ஒரு சகாப்தம் … இதை மறுப்பதற்கில்லை!
சா.ரா.
0 Comments