இந்தியாவின் இளம் அரசியல் நாயகன்!

எழுச்சி நாயகன், சூப்பர்  நாயகனாக தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவே இவரை  வியந்துப்  பார்த்துக் கொண்டிருக்கின்றது. நாடு முழுவதும் இவரின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது. 

இந்தியாவின் இளைய  வயது முதலமைச்சராக  ஆந்திராவில் பதவியேற்றுள்ள  ஜெகன் மோகன் ரெட்டி நாட்டின் அனைத்து தரப்பு மீடியாவும் இவரின் வெற்றியை மெச்சியுள்ளது. 


யார் இந்த ஜெகன்:
ஆந்திராவில் மக்களின் நாயகனாக எழுச்சியுடன் ஆட்சி செய்து தான்  சார்ந்த கட்சிக்கே  தலைவழியாக இருந்து மக்களுக்கு  சிறப்பான ஆட்சி செய்து விமான விபத்தில் இறந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன்தான் ஜெகன் மோகன் ரெட்டியாவார். 

ஒய்.எஸ்.ராஜசேகர  ரெட்டியின் இறப்புக்குப் பின் அரசியலில் இறங்கினார் ஒய். எஸ். ஆரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியாவார். 2009 இல் தனது தந்தை இறந்த பின் முதலமைச்சர் பதவியானது காங்கிரஸானால்  ரோசய்யாவுக்கு கொடுக்கப்பட்டது.   ஜெகன் மோகன் ரெட்டி புறக்கணிக்கப்பட்டார். காங்கிரஸின் புறகணிப்பை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டு, தனது அரசியல் பயணத்தை யாத்திரையாக கொண்டு பொதுமக்களை நோக்கி  நேரடியாக நடைபயணமாக செயல்பட்டார். 



ஒய். எஸ்.  ராஜசேகர் ரெட்டியின்  இந்த அரசியல் பயணமானது  மற்ற அரசியல் கட்சிகளை மிகுந்த சிக்கலுக்குண்டாக்கியது. அவரின் மீது வழக்குகள் அதிகமாக பதியப்பட்டன. 

ஆந்திர மாநில பிரிவை எதிர்த்து ஐந்துநாள் உண்ணாவிரதம் இருந்தது, தந்தை இறந்த பொழுது அதிர்ச்சியால் இறந்த 200 மொதுமக்களை  நேரடியாக நடைபயணமாக பார்க்கச் சென்றது என தொடர்ந்து   அதிரடியாக செயல்பட்டார். 

மக்களின் கவனங்களை ஈர்த்து, மக்களுக்கு என்ன தேவை என்பதை  ஜெகன் நன்றாக அறிந்து கொண்டார்.  அரசின் எதிர்ப்பு, ஊடகங்களின் தாக்கம் அனைத்தையும் மீறி ஜெகன் மக்களிடம் தவிர்க்க முடியாத தலைவராக வளர்ந்து கொண்டிருந்தார். 2014 தேர்வில் சிறிது வெற்றி பெற்ற தொடர்ந்து ஐந்து வருடம் உழைத்தார். 

2019 இல் அவர் எதிர்ப்பார்த்த அடுத்த  தேர்தலினை எதிர்கொண்டார்.  ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் என்ற ஜெகனின் கட்சியானது ஆந்திராவில் அதிர்வலைகளை மக்களிடையே ஏற்படுத்தியது. ஒட்டு மொத்த மக்களவை, சட்டமன்ற தேர்தலை சொல்லி அடித்தது போல், அப்பாவின்  கிரேஸ் அப்படியே மக்களை  ஆட்டிப் படைத்தது. 

2019 ஆம் ஆண்டு  மக்களவை தேர்தலில்மொத்தம் உள்ள 175   சட்ட மன்ற தொகுதிகளில் 151 இடங்களை வென்றது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  கட்சி. ஆந்திராவின்  முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியானது வெறும் 23 இடங்களை மட்டும் பெற்றது. 

மக்களவை  தேர்தல்: 
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் நடைபெற்றது. மக்களின் நாயகனான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு  தேச கட்சியும், ஆந்திராவின் மாஸ்   ஹீரோவான பவன் கல்யாணின் ஜனசேனாவும்  2019 ஆம் ஆண்டு  சட்டமன்ற   தேர்தலை  எதிர்கொண்டது. 

மொத்தம் 25 மக்களவை தொகுதிகளில் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியானது  22 இடங்களையும் மற்ற கட்சிகள் பெற்றன.  ஆந்திராவின் ஆளும் தெலுங்கு தேசக் கட்சி 3 இடங்கள் பெற்றன. 

தொடர்ந்து போராடி  இரண்டு தேர்தல்களை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை  அடித்தார் ஜெகன். 

பாகுபலி பதவியேற்பு: 
பாகுபலியைப் போல் எழுச்சியுடன் மக்களின் முன் யாத்திரையை தொடங்கி மக்கள் முன் வெற்றியை ஏற்று,  அவ்வாறே  பதவியேற்பினை ஏற்றார். ஜெகன் மோகன் ரெட்டி அவர் பதவியேற்கும் போது   ஜெகனின் கோசங்கள் விண்ணை முட்டின. நமது மீடியாக்களின் நெகடிவ் டிரெண்டாக இருந்தவர் இன்று அதையெல்லாம் உடைத்து, பாஸீட்டிவான முதல்வராக இன்று ஜொலிக்கிறார். 



பதிவியேற்றதும் முதியோரின் உதவித் தொகையை உயர்த்தினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சனிக்கிழமைகளில் மாணவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட ஆணை பிறப்பித்து புதுமையை புகுத்தப்பட்டுள்ளது. தனக்கு கீழ் 5 துணை முதல்வர்களை ஜாதிவாரியாக நியமித்துள்ளார். 25 கேபினட் அமைச்சர்களையும்  தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்து கௌரவித்துள்ளார். 

ஜாதிவாரியான சிக்கலை தவிர்த்து சிறப்பாக செயல்பட அந்தந்த பிரிவினருக்கு என தனித்தனி துணை முதல்வர்களை நியமித்து. தேசிய அளவில் புதிய அரசியல் அனுகுமுறையை கையாண்டுள்ளார். அத்துடன் மக்கள் மனதில் சிறந்த இடம் பெற்றுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது ஆகும். 

ஆந்திர  அரசியலில் அடுத்த அத்யாயத்தை எழுத தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டியின்  அமைச்சரவையில்  ரெட்டி சமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தகவல்கள் வந்தாலும் 25 கேபினட் அமைச்சர்களையும் ஜாதிவாரியாக அனைத்து தரப்பு மக்களின் சமூகத்தையும் சேர்ந்தவர்க்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

2019 ஆம் ஆண்டில்  இளம் வயது முல்வராக ஜெகன் அரசியலில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். சிறப்பான நடவடிக்கைகள் மூலம்  மக்களிடையே தனது தாக்கத்தை  பதியச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Post a Comment

0 Comments