வெற்றிக்கு வேண்டும்!, ஹார்டு வொர்க்குடன் சுமார்ட் வொர்க்

ஹார்டு வொர்க்குடன் இணைந்த  சுமார்ட் வொர்க் செய்து பெறும் வெற்றியானது தனித்தன்மையுடன் இயங்கச் செய்யும்.  நமது இலக்கை நோக்கி பயணிக்க வகுக்க வேண்டிய தொலைநோக்குப் பார்வையில் செயல்படச் செய்வது சுமார்ட் வொர்க்,  வகுப்பட்ட இலக்கை நோக்கி தொலை நோக்குப் பார்வையுடன் கடுமையான உழைப்பை கவனமாக கூர்மையாக  கொண்டு செல்வதே  ஹார்டு வொர்க் ஆகும்.  ஹார்டு வொர்குடன் இணைந்த சுமார்ட் ஒர்க்கானது நேர மேலாண்மை,  செயல்பாட்டில் வேகம்,   தடையூறுகளை கடக்கும் யுக்தி போன்றவற்றை கற்றுக் கொடுத்து நம்மை வழிநடத்தும். 

வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன், செய்யும் செயலில் ஆக்கத்துடன் கூர்மையும், புத்திசாலித்தனமும் இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுகின்றது. நாம் எந்த பணியில் இருந்தாலும், படித்தாலும்,  படித்து முடித்து வேலை தேடுபவர்கள்,  இல்லறத்தில் உள்ளோர் என அனைவருக்கும்,  வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருப்பது இயற்கை. 



உங்கள் செயல் மற்றும் முயற்சியில் வரும் இடையூறுகளை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயல வேண்டும். மன ஒருமையுடன்  செயலில் புத்திசாலித்தனமும்  உடன் கடுமையான உழைப்பும் கொண்டு செயல்படும் வேகமே நிலையான வெற்றியை பெற்றுத் தருகின்றது. அது நம்மை மேலும் தொடர்ந்து செயல்பட செய்கின்றது. 

போர்களத்தில் அர்ஜூனனின் தயக்கத்தை கண்ணன் புத்திசாலித்தனமான தனது கீதையை கொண்டு போக்கினார். பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனையில் கலாம் அவர்கள் பயன்படுத்திய திருநல்லாறு சனீஸ்வரன் கோவில் நுனுக்கம் என்பது தான் கடுமையான உழைப்புடன் இணைந்த புத்திசாலித்தனம்.  கடுமையான உழைப்புடன் புத்திசாலித்தனத்தை சேர்க்கும் பொழுது கிடைக்கும் வெற்றி சிறந்த பலனை கொடுக்கும். 

கல்லுரியில் ஓட்டப் பந்தயம் ஓடும் பொழுதும், நாட்டுக்காக  ஓட்டப்பந்தயம் ஓடுபவருக்கும் இருக்கும் அழுத்தங்கள்  வெவ்வேறு ஆனால் வெற்றி  எனும் பொறுப்புணர்ச்சி ஒன்றுதான், என்னதான் கடுமையான பயிற்சி வீரர்கள்  செய்தாலும், போட்டியில் அவர்களின் நுணுக்கம் நேர மேலாணமை, வேக செயல்பாடுகளின்  முன் கணிப்பு அவர்களை வெற்றி இலக்கை எளிதில் இலக்கை அடையச் செய்கின்றது.

Post a Comment

0 Comments