அழுகை, சிரிப்பு, காதல், வீரம், கம்பீரம், கோவம் என அனைத்து பாவனைகளையும் தேவைப்படும் அளவிற்கு கொடுத்து தனது தனித்தன்மையை நிருபித்து சினிமா எனும் பெரிய திரையிலும், தொலைக்காட்சி எனும் சின்னத்திரையில் தனது கைதேர்ந்த நடிப்பினால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ராதிகா ஆவார்.
நவீனகால நடிகையர் திலகம் ராதிகா மீண்டும் சின்னத்திரையில் பிரைம் டைமில் நடிக்கவுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் முடிசூடா ராணியாக வலம் வருபவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயிலில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடித்துவருகின்றார்.
கடந்த 15 ஆண்டுகாலமாக சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி, சந்திர குமாரி தொடர்களில் நடித்து தமிழகத்து வீடுகளில் ஒருவராக நிலைத்து நிற்பவர் நடிகை ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தொடர்ந்து நடித்து வருவதால் சிறுஓய்வு எடுக்க சந்திரகுமாரி தொடரில் இருந்து விலகினார் என்பது நாம் அறிந்ததே ஆனால் ஜூலையில் மீண்டும் தனது டைமிலே தனியார் தொலைக்காட்சி தொடரில் நடிக்கவுள்ளார்.
ராதிகாவின் நடிப்புத்திறன் ஆரம்ப காலம் முதல் இன்று வரை மக்களை கவர்ந்து வருகின்றது. அவரது கைதேர்ந்த நடிப்பினை கிழக்கு சீமை, பசும்பொன், ஜீன்ஸ், போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன் என பல்வேறு படங்களில் தனது கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தவர் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவரை நவீனகால நடிகையர் திலகம் என்றே கூறலாம. அழகு, நிறம் வைத்து சினிமாவில் ஜொலிக்கும் பலரிடையே இன்றைய கால கட்டத்தில் ராதிகா போன்ற திறமையாளர்களை பெற்று இன்று சினிமா ஜொலிக்கின்றது எனில் அது மிகையாகாது.
எம். ஆர்.ராதாவின் மகளாக இருந்தாலும் தனக்கென ராதிகா இன்று தனியொரு பாதையை தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்து மக்கள் மனதில் தனியொரு இடம் பிடித்தவர் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
0 Comments