உயர்கல்விக்காக வங்கிக்கடன் பெற வழிமுறைகள்!,

பொண்ணு மேல் படிப்பு படிக்க ஆசைப்படுறா அதுக்கு நிறைய பணம் செலவு ஆகும். ஆனால் கையில பணம் இல்லை, என யோசிக்கும் பெற்றோரே நான் ஏற்கனவே கடன் வங்கியில  வாங்கிட்டேன், இதுல எப்படி பிள்ளை  படிப்புக்கு கடன் கேட்டு   பேங்க் போவது என யோசிக்கும்  அன்பு பெற்றோர்களே உங்களுக்கான இந்த பதிவினை படியுங்கள்,  அரசு ஆணையின்படி  வங்கியினை அனுகுங்கள் நிச்சயம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். 

அன்பு பெற்றோர்களே ஆசைப்பிள்ளைகளுகளின் மேல் படிப்புக்கு கையில் பணவசதியில்லாமல் திண்டாடுகிறிர்களா, இந்த ஜனநாயக நாட்டில் அரசு கல்வியின் அவசியம் உணர்ந்து,  ஆணைகள் மாணவர்களுக்கு சாதகமாக அறிவித்துள்ளது. கல்வி கடன் பெறுவதில் நீங்கள் தயக்கத்தைப் போக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களுக்கு அரசு கொடுத்துள்ள சலுகைகளையும் அறிய தகவல்களை கொடுத்துள்ளோம் படியுங்கள்.




உயர்கல்விக்காக  கடன் வசதியினை மாணவர்கள் குறிப்பிட்ட காலம் மட்டும்தான் பெற முடியும் என, விதிமுறைகள் எதுவும் இல்லை ஆகையால் வருடம் முழுவதும் வங்கி  கடன் பெறலாம் என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

பெற்றோர்களே நீங்கள் விவசாய கடன் பெற்றிருப்பதால் உங்களுக்கு கல்வி கடன் கிடைக்காது என யாரேனும்  கூறினால் அதை  பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் உங்களுக்கு நிச்சயம் கல்வி  கடன் கிடைக்கும் ஆகவே வங்கியில் நிராகரிப்பு  செய்தால்  தயாங்காமல் கேட்கவும். 

கல்விக்கடன்  பெற வங்கிக்கு நடையாக நடையாய் நடந்து  வெறுத்துப் போய்விட்டீர்களா, கவலை வேண்டாம் உங்களுக்காக அரசின் இணையதளம் உள்ளது வித்யாலட்சுமி.காம் http://ww17.vidyalakshmi.com/ எனற தளம் மூலம் வங்கி கடன் பெற விண்ணப்பியுங்கள் மாணவர்களே இந்த தகவலை பெற்றோர்களுக்கு தெரிவியுங்கள். 

மாணவர்கள் கல்விக்கட்டணத்தில்  சேர்த்துக் கொள்ள வேண்டிய விவரங்களை கிழே கொடுத்துள்ளோம் அதனைப் படியுங்கள் 

கல்விக்கட்டிணத்தில் மாணவர்களுக்கு விடுதிக் கட்டணம்,  தேர்வு ஆய்வு கட்டிணம் , போக்குவரத்து செலவு, விமானக் கட்டணம், காப்பீடு, புத்தகங்கள், கம்பியூட்டர்  போன்றவற்றினைப் பெற ஆவணங்களுடன் வங்கியில் விண்ணப்பித்து கடன் பெறலாம்.

மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டுகள் முழுமையையும் விண்ணப்பத்தில் தெரிவித்து கடன் தொகையினை மொத்தமாகப் பெற தொகையினை முழுமையாக மதிபபீடு செய்து விண்ணப்பிக்கவும். 

முறையான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். 30 நாட்களுக்குள் விண்ணப்பத்திற்கான  பதிலினை வங்கி  சார்பில் தெரிவிக்கப்பட வேண்டும். வங்கியின் பதில்கள் உங்களுக்கு சாதகமாக இல்லையெனில் நீங்கள் அனுக வேண்டிய முக்கிய விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.

மாணவர்களின் மண்டல மேலாளர் மாவட்டத்தின் முன்னோடி வங்கி மேலாளர், ஆட்சித்தலைவருக்கு மாணவர்கள் தங்கள் தேவையை  தெரிவித்து  நடவடிக்கையினை துரிதப்படுத்தலாம். 

மேலும் மேல் முறையீட்டிற்காக இந்திய ரிசர்வ் வங்கி கோரிகையான ஆவணங்களுடன் முறையிட்டால் வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்படும். முகவரியின் இணைப்பை கிழே கொடுத்துள்ளோம்.

இந்திய ரிசர்வ் வங்கி, 
நுகர்வோர் கல்வி பாதுகாப்பு பிரிவு, 
16, ராஜாஜி சாலை, 
சென்னை -600001

மாணவர்களே உங்கள் கனவுப் படிப்பினை படிக்க எதிர்வரும் தடைகளை தகர்த்து எரிந்து முன்னேறிச் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கே !...

Post a Comment

0 Comments