வாட்டி வதைக்கும் வெய்யில் ஒரு பக்கம், விடுமுறையில் விருப்பமாக விளையாடமுடியாத பிள்ளைகள் ஒரு பக்கம் என எங்கு பார்த்தாலும் ஒரே இடையூறுகளாக இருக்கின்றது என பெரியோர்கள் புலம்பும் வேலையில் பிள்ளைகள் சுர் வெய்யிலில் சுகமாக விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இன்னும் சிறப்பாக இருக்கின்றது.
பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் மெனக்கெட்டு திட்டமிட்டு சுற்றுலா அழைத்து செல்ல விடுமுறையை தேடுகின்றனர். பிள்ளைகள் எதுவானாலும் விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்கின்றனர்.
கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு காட்டன் துணி வாங்கி அணிய வையுங்கள் வேர்க்க விறுவிறுக்க விளையாடினாலும் பிள்ளைகளுக்கு காட்டன் கடுமையை தராமல் காக்கும்.
பிள்ளைகள் குளிக்கும் நீரில் எழுமிச்சை அறைமுடி மற்றும் உப்பு பிழிந்துவிட்டு குழிக்கச் சொல்லுங்கள். எண்ணங்களும் உடல் ஆரோக்யமும் சிறப்புடன் இருக்கும். அத்துடன் ஆன்மீக ரீதிரியில் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடல் அசதி, நோய் கோளாறுகள் மற்றும் கண் திருஷ்டி போன்றவை மறையும.
விடுமுறைகாலம் இது ஆகையால் மார்கெட்டில் பேரம் பேசி தர்பூசணி, எலுமிச்சை 5 காய்கள் பத்துரூபாய் வீதம் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுங்கள் இளநீர் குடித்தல் நலம் பயக்கும்.
கோடைக்காலத்தில் அனைவரும் காட்டன் உடைகளுடன், பழங்கள், தண்ணீர், இளநீர் குடிக்க வேண்டும்.
மரத்துக்கு அடியில் பகல் நேரத்தில் அமர்ந்து வெய்யிலில் சுகம் தரும் மர நிழல் குறித்து பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
ஏசி அறையில் இருந்து வெளி உலகம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் வசிப்பது நகரமெனில் பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுடன் நேரம் செலவழித்து விளையாடுங்கள் மால் கலாச்சாரத்தைவிட மதிப்புமிக்க பல கலாச்சார வழக்கங்கள் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் வழிப்பாட்டுத்தலம், யோகா, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், கதைப் பேசுதல் புத்தகம் வாங்கிப் படிக்க வைத்து அதுகுறித்து கருத்து பரிமாற்றம் செய்தல். மொழிகள், சங்கீதம், ஆடல், பாடல் போன்ற கலைகள் படிக்க உற்றத்துணையாக இருக்க வேண்டும்.
குளிர்பானங்களை அதிகமாக வாங்குவதை குறைக்க வேண்டும். நுங்கு சாப்பிடுங்கள், பன வெல்லம் பயன்படுத்தி உடல் சூட்டை குறைக்கலாம்.
0 Comments