ஆசிய தடகளத்தில் தங்கத்தை வென்ற சித்ரா... வாழ்த்துக்கள்!

23ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் பெரும் சிறப்பாக  கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி நாளான இன்று 1500 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் கேரளாவைச் சேர்ந்த பியு சித்ரா தங்கம் வெற்றியாகப் பெற்றுள்ளார்.

தடகளப் போட்டியின் தூரத்தை அவர் 4 நிமிடம் 14.56 வினாடியில் கடந்து சாதனைப் புரிந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் தங்க வேட்டை அதிகரித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த  கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று முதல் தங்கத்தை வென்று 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் பெற்றார். 



இந்தியா இந்த தடகளப்போட்டிகளில் 3 தங்கம் , 8 வெள்ளி மற்றும் 7 வென்கலம் ஆகிய பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 
இந்தியாவின் இந்த வெற்றியானது இந்தியர்களை பெருமை அடையச் செய்துள்ளது. இந்தியர்கள் கவனம் ஐபிஎல்லில் மட்டும் இல்லை. ஆசிய தடகள வெற்றியையும் ஆங்கேங்கே பெருமிதத்துடன் கொண்டாடுகின்றனர் என்பது பெருமிதமே இருப்பினும் இந்த  கவனம் பத்தாது. 

தொடர்ந்து  மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் விழா எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்தால்  நாட்டில் சாதனையாளர்கள் எண்ணிக்கை  பெருகச் செய்யலாம்.

மேலும் படிக்க:

தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தமிழக மங்கை!

Post a Comment

0 Comments