மெட்ரோ ரயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் மெட்ரோ ரயில் கார்பரேசனில் நிறுவனத்தில் காலியாகவுள்ள கட்டிட பொறியாளர் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக் முடித்திருக்க வேண்டும். கேட் தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ரூபாய் 25,000 மாதச் சம்பளமாகப் பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். நகல்களை ஜென்ரல் மேனேஜெர், பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்பரேசன் லிமிட்டெடு 3 புளோர், பிஎம்டிசி காம்பிளக்ஸ், கே.எச்.ரோடு சாந்திநகர், பெங்களூர், 560027 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மே6, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments