கன்னியாகுமரியில் கடற்சீற்றம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

கடற்கரை கிராமங்களில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்த நிலையில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. ஆகையால் கடலுக்கு மீனவர்கள் செல்வதை தவித்துள்ளனர்.

இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையமானது தென்மேற்கு வங்ககடல் மற்றும் இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று தெரிவித்தது. 
இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி, நாளை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் இது புயலாக மாறும் என்று அறிவப்பு  மீனவர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
 
 தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள்  அதிக மழை முதல் கன மழை பெறும் என்று வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த சீசனில் உருவாக இருக்கும் புயலுக்கு ஃபனி என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 
 



கன்னியாகுமரியின்  கடற்கரை கிராமங்களில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்த நிலையில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 2வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தென் மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி, நாளை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் இது புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   மேலும்  இதனையடுத்து வந்த தகவலாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள் அதிக மழை  பெறும் என்று வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. 

தென் தமிழக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமங்காளான நீரோடி, மார்த்தாண்டனத்துறை, வள்ளவிளை, அழிக்கால், குளச்சல், கடியபட்டணம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு நேற்று வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. 
 
பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும்,உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனை அடுத்து அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மீன்வர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments