தமிழ்நாடு நீர் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 62 ஆயிரம் வரை சம்பளத் தொகை கிடைக்க பெறும் ஒரு துறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சிறந்து வளங்குகின்றது.
தமிழ்நாடு மாசுக்காட்டுபாட்டுவாரியமானது 1974 பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. சென்னையை தலைமை மையமாகக் கொண்டு 7 மண்டலமாக 38 மாவட்ட அலுவகங்கள் செயல்படுகின்றன.
இவ்வாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 91 ஆகும்.
அஸிஸ்டெண்ட் ஜூனியர், டைபிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதியாக ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில் 6 மாத கால சான்றிதழ் படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பிரிவில் உயர்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
மாதச் சம்பளமாக 19, 500 முதல் 62,00 வரை பெறலாம்.
18 வயது முதல் 30 வயதுள்ளோர் வரையுள்ளோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
எழுத்து மற்றும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
பொது மற்றும் ஒபிசி பிரிவில் ரூபாய் 500 மற்ற அனைத்து பிரிவினரும் ரூபாய் 250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் தேவைப்படும் தகவல்கள் பெற அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கினை கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க:


0 Comments