எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள கிளாரிக்கல் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் மிகபெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கிளாரிக்கல் பணிகளுக்கான அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 8653 ஆகும்.
ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு 421 இடங்கள் தமிழகத்திற்கும் புதுசேரிக்கும் 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
எஸ்பிஐ வங்கிப்பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இளங்கலை இறுதியாண்டு மாணவர்களும் தேர்வு எழுத தகுதியானவர்கள் ஆவார்கள்.
20 வயது முதல் 28 வயதுள்ளோர் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவார்.
மாதச் சம்பளமாக ரூபாய் 13,075 முதல் ரூபாய் 31, 450 வரை பெறலாம்..
பொது மற்றும் ஒபிசி பிரிவினர் கட்டணத் தொகையாக ரூபாய் 750 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 125 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
முதல்நிலை தேர்வு 100 மதிபெண்கள் கொண்டுள்ளன. அப்ஜெக்டிப் முறையில் கேள்வித்தாள் கொண்டுள்ளது.
முதன்மை தேர்வானது 4 பிரிவுகளை கொண்டது. அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். 200 மதிபெண்களுக்கு 190 கேள்விகள் கொண்டு செயல்படும். இந்த தேர்வுக்கான நேரம் 2 மணி நேரம் 40 நிமிடம் ஆகும். நெகடிவ் மதிபெண்கள் உடையவை ஆகும்.
எஸ்பிஐ வங்கியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி மே 3, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments