தாலுக்கா அளவிலான எஸ்ஐ தேர்வு குறித்த விவரங்கள்!

டிஎன்யுஎஸ்ஆர்பியின் எஸ்ஐ தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே தாலுக்கா அளவில்  நியமிக்கப்படும் எஸ்ஐ தேர்வினை வெற்றி  பெற விடா முயற்சியுடன் பயிற்சியும் நேர மேலாண்மையும் அவசியம் இவைகளை திட்டமிட்டு அதனை முறையாக செய்தால் நிச்சயம் தேர்வினை வெற்றி பெறலாம்.

தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின்  தேர்வு முறைகள் எவ்வாறு இருக்கும் என இப்பதிவு  உதவியாக இருக்கும். 

தாலுக்கா அளவிலான எஸ்ஐ பணிக்கு விண்ணப்பித்துள்ளோர்  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2.30 மணி நேரத்தில் பொது அறிவு பாடத்தில் 40 மதிபெண்களுக்கும் ஆப்ஸ் என அழைக்கப்படும் கணிதம் திறனாய்வு  அனாலிஸ்ட், நியூமிரிக்கல் சைக்காலஜி, கம்யூனிகேசன் ஸ்கில், இன்பர்மேசன்  ஹேண்டலிங் எபிலிட்டி போன்ற பிரிவில் கேட்கப்படும் 30 மதிபெண்கள் மொத்தம் 70 மதிபெண்களுக்கு தேர்வு எழுதுவீர்கள் அவற்றில் 35% சதவீத மதிபெண் பெற்றோர் தேர்ச்சி பெற்றோராக கருதப்படுவார்கள். மொத்தம் 140 கேள்விகள் கொண்ட தேர்வில் ஒவ்வொரு  கேள்விக்கும் 1/2 மதிபெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 



துறையிலிருந்து தேர்வு எழுதுவோர்க்கு பொது அறிவு பகுதியில் 15 மதிபெண்களும் மற்ற கணிதம் திறனாய்வு  அனாலிஸ்ட், நியூமிரிக்கல் சைக்காலஜி, கம்யூனிகேசன் ஸ்கில், இன்பர்மேசன்  ஹேண்டலிங் எபிலிட்டி, இண்டியன் பீனல் கோடு, கிரிமினல் புரொசிஜெர் கோடு, இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட், போலிஸ் ஸ்டேண்டிங் ஆர்டர்ஸ் அண்ட்  போலிஸ் அட்மினிஸ்ற்றேசன் போன்ற பிரிவில் 70 மதிபெண்களுக்கு கேள்விகள் இருக்கும் மொத்தம் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.  மொத்தம் 170 கேள்விகள் கொண்ட தாளில் ஒவ்வொரு கேள்விக்கும் 1/2 மதிபெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். 

மேலும் படிக்க:

தாலுக்கா அளவிலான சப்இன்ஸ் பெக்டர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!


Post a Comment

0 Comments