மத்திய தேர்வாணையமான யூபிஎஸ்சி நடத்தும் இந்திய அளவிலான இந்தியன் எக்னாமிக்ஸ் மற்றும் ஸ்டேட்டிக்கல் சர்வீஸ் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பொருளாதார மற்றும் புள்ளியல் பணிக்கான தேர்வுகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறலாம்.
21 வயது முதல் 30 வயதுள்ளோர் வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதியாக இந்திய பொருளாதாரத்துரையில் அப்ளைடு எக்கானிமிக்ஸ், பிசினஸ் எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்னப்பிக்கலாம்.
புள்ளியல் பணிக்கு புள்ளியல் துறையில் கணித புள்ளிவிவரங்கள், அப்ளைடு ஸ்டாட்டிக்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது புள்ளியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 16, 2019 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி ஆகும்.
தேர்வு நாள் ஜூன் 28.6.2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments