யோகம் தரும் சிவராத்திரியின் சிறப்புகள் மற்றும் வழிப்பாட்டு முறைகள்!

நாளை மார்ச் 4, 2018 ஆம்  நாள் மகா சிவராத்திரி, சிவராத்தி விரதம் இருந்து காலை உணவு மட்டும் உண்டு, இரவு முழுவதும்  கண்முளித்து சிவன் கோவிலில் இருந்து வேண்டுதல் செய்து, நான்கு கால பூஜையில் பங்கு பெற்று  வாருங்கள் நன்மை பெருகும். 

சிவாராத்திரி நன்நாளில் உங்களது குரு யாராக இருந்தாலும் அவர்களை   நேரில் சென்று பார்த்து வாருங்கள்.  அவர்களுக்கு  ஏதேனும் வாங்கிக் கொடுங்கள். 

சிவராத்திரி தினத்தில் சிவனின் பஞ்சாட்சர மந்திரங்களான ஓம் நமசிவாய, ஓம் சிவ சிவ, ஓம் சிவாய நம  இவற்றில் ஏதாவது ஒன்றினை ஜெபித்து வாருங்கள் நன்மை பயக்கும். மேலும் நினைத்தது நிறைவேற சிவ மந்திரத்துடன் வேண்டி வந்தால் அனைத்தும்  நிறைவேறும் மற்றும் அத்துடன் சிவன் அருளுடன் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் பெறும்.

இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் தேவையான செல்வங்கள்  அனைத்தும் கிடைக்கப் பெறும். சிவராத்திரியன்று மாலை 6 மணிக்கு கோவில் சென்று  இரவு முழுவதும் கோவிலில் இருந்து 4 கால பூஜையில் பங்கேற்று  வரவேண்டும். 



காலையில் வந்து உணவு சாப்பிட்டு செவ்வாய்    காலையில் தூங்கமால் மாலையில்தான் தூங்க வேண்டும். மாசிமாதம் கிருஷ்ண பட்ச காலத்தில் வருவது மகா சிவராத்திரி ஆகும். ஆண்டின் மற்ற எல்லா சிவராத்திரிகளை விட இது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

மாலை நான்கு காலப் பூஜை சிவனுக்கு  சிவராத்திரி அன்று நடைபெறும். மாலை 7.30 மணிக்கு முதல் காலப் பூஜை நடைபெறும். இரவு 10.30மணிக்கு இரண்டாம் காலப்பூஜை நடைபெறும். மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். நான்காம் காலப்பூஜை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும். 

சிவராத்திரி வழிப்பாட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம். சிவராத்திரியின் போது நான்கு ஜாம காலப்பூஜையில் பங்கேற்று வழிப்பட்டால் பல நன்மைகள் கிடைக்கப் பெறலாம். 



முதல் கால பூஜை பிரம்மா சிவனுக்கு செய்யும் பூஜையாகும் இது பஞ்சகவ்யத்தின் மூலம் செயப்படுவது. பஞ்ச கவ்யம் என்பது பசும்பால், பசும் நெய்,  பசும் கோமியம், பசும் சாணம், பசும் தயிர் இவை  ஐந்தும் கலந்து நடைபெறுவதாகும். பஞ்ச கவயம் கொண்டு அபிசேகித்து மஞ்சள்நிற ஆடை அணிவித்து, தாமரைப்பூ அர்ச்சனை அலங்காரம் செய்வார்கள். பாசிப்பருப்பு நெய்வேத்யம் செய்து நெய்  தீபத்துடன் ரிக் வேதகாலத்துடன் நடத்தப்படும். இப்பூஜையை  அனுசிட்டித்தால் இந்த பிறவி பயன் கிடைக்கும். 

இரண்டாம் காலபூஜை காக்கும் கடவுளான  விஷ்ணு சிவனுக்கு செய்யும் பூஜையாகும். விஷ்ணு பகவான் இந்த கால கட்டத்தில் பஞ்சாமிரதம் கொண்டு அபிசேகம் செய்வார்கள்,  சந்தனக் காப்பு செய்து, வெண் பட்டு சாற்றுவார்கள். நல்லெண்ணெய் தீபத்துடன் யஜூர் வேதத்துடன் இனிப்பு பாயசம் நெய்வேத்தியமாக கொண்டு நடத்தப்படும்.தனம் தானியம் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். 

மூன்றாம் காலப் பூஜை சக்தியின் வடிவான அம்பாளை வணங்குகிறார்கள். தேன் அபிசேகம் செய்து பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலைகளை கொண்டு அலங்காரம்  செய்வார்கள், சிவப்பு வஸ்திரம் அணிவார்கள், ஜாதி மல்லி கொண்டு அர்ச்சனை செய்வார்கள்,இலுப்பு எண்ணெய் கொண்டு தீபம் கொண்டு சாம வேதத்துடன் பூஜை செய்வார்கள்.

இக்கால லிங்கோத்பவர் காலம் என்பார்கள் சிவனின் ரூபம் காண பிரம்மா அண்ண ரூபமாக மகா விஷ்ணு  வராகரூபமாக பாதளத்தை சிறப்பை தேடி இருந்த காலம்.  இந்த காலத்தை விரதம் இருந்து பூஜை செய்தால் சக்தியின் முழு அருள் கிடைக்கும். 

நான்காம் காலபூஜை அனைத்து  தேவர்கள், மனிதர்கள், ஜீவராசிகள் அனைவரும் கலந்து  செய்யும் பூஜையாகும். 
குங்கும பூச்சாறு, கரும்புசாறு, பால் அபிசேகம் செய்து நந்தியாவட்டப்பூவால் அலங்காரம் செய்வார்கள் அர்ச்சனையுடன் அதர்வண மந்திரம் பிரயோகிப்பார்கள்.

Post a Comment

0 Comments