மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களா நீங்கள்!

பிளஸ் டூ மாணவர்களுக்கு  பொதுத் தேர்வு முடிந்துவிட்டது. பொதுத் தேர்வினை வென்ற மாணவர்களுக்கு அடுத்த கல்லுரிக்கு சென்று  தங்கள் கனவு லட்சியத்தை நோக்கி  லட்சக்கணக்கான மாணவர்கள் தேசமெங்கும் தேடலுடன் அடுத்த என்ன செய்வார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மாணவர்களே உங்களுக்கான வாய்ப்புகளையும் என்ன படிக்கலாம், நுழைவு தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் விளக்கித் தொகுப்பாக தருகின்றோம் படியுங்கள் உங்கள் கனவை விசாலாமாக்குங்கள்  வெற்றி பெறுங்கள்.


 பாலிடெக்னிக் டிப்ளமோ:
பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 2 படிக்காமல் மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்கள் லேட்டரல் என்ட்ரி மூலம்  பொறியியல் கல்லுரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்ந்து படித்து தேர்ச்சி பெறலாம். 

பாலிடெக்னிக் மூலம்  பெறும் டிப்ளமோ கல்வியின் மூலம் மாணவர்கள் தங்கள்  கல்வித்தரத்தை  மேலும் உயர்த்தவே கல்லுரிகளில் இரண்டாம் ஆண்டில் இணைந்து படிக்க முடியும். 

பிளஸ் டூ உயிரியல் பாடம்: 
பிளஸ் டூவில் உயிரியல் பாடங்கள் படித்தவர்கள் எம்பிபிஎஸ் படிப்பினை படிப்பார்கள். முந்தய  ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பிளஸ் 2வில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு இல்லாத நிலை இருந்தது ஆகவே மாணவர்கள் உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் எடுக்கும் கட் ஆப் மதிபெண்களை கொண்டு எம்பிபிஎஸ் மதிபெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன, அவற்றில்   மாணவர்கள் படித்தனர். அப்பொழுது தமிழ்நாட்டுல் அரசு சீட்டுகள் 30000 குறைவான இடங்கள் கடும் போட்டிகளாக இருக்கும். 

அரசு மருத்துவ கல்லுரிகளில் இடம் பெறும் மாணவர்கள் ரூபாய் 15,000  வரை கல்வி கட்டணம் செலுத்தினால் போதுமானது ஆகும். அதனால் தான் டாக்டர் படிப்புக்கு மாணவர்கள் மிகுந்த போட்டிபோட்டு படித்தனர். 

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வு  தமிழகமும் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதி அவற்றில் பெறும் மதிபெண்கள் மூலமாக  மருத்துவ சீட்டு ஒதுக்கீடு பெற்றனர். 

அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் கிடைக்கப் பெறவில்லையெனில் பிடிஎஸ், பார்மசி, நர்சிங், பிசியோ தெரபி துணைப் படிப்புகள் படித்து பணிவாய்ப்பு பெறுகின்றனர். 

 பிளஸ்2 கட் ஆப்கள் வைத்துதான் சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற  படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.   கடந்த மூன்று ஆண்டுகளில்  எம்பிபிஎஸ் கிடைக்கப் பெறாத மாணவர்கள்  மேற்கூரிய மற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுகின்றனர். 

ராணுவ மருத்துவ கல்லுரி,  ஜிப்மர், எய்ம்ஸ்:

ராணுவ மருத்துவ கல்லுரி மற்றும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்லுரிகளின் தனி நுழைவுத் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களும்  உள்ளனர்.  

ராணுவ மருத்துவ கல்லுரிகளில்  தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால அங்கு படிக்க மாணவர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். 

அகில இந்திய அளவில் மாணவர்கள்  அரசு ஒதுக்கீட்டில் 15 % வீதம்  நாடு முழுவதும் கல்லுரிகளில் பெறலாம். அதற்காகவே தமிழக மாணவர்கள் நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம் ஆகின்றது. 

Post a Comment

0 Comments