எல்லைப் பகுதியில் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் குறித்து பலமுறை எடுத்துக்கூறி ஆதரங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பினோம். ஆனால் பாகிஸ்தான் அது குறித்து கண்டு கொள்ளவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை.
இந்தியாவின் எல்லைப் படை வீர்ர்களை தாக்கி அழித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகம் விளைவிக்கும் எந்த ஒரு சக்தியையும் இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது.
இந்திய விமானப்படையின் தாக்குதலின்படி பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் பயங்கரவாத தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தியாவை தாக்க பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு, உதவிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து பெறப்படுகின்றன. இந்தியா கொடுத்த தீவிரவாதிகளின் ஆதாரம் எதையும் கண்டுகொள்ளாத பாகிஸ்தான் அலட்சியத்தால் பலியானது இந்தியாவின் அமைதி ஆகும். இதனால் தான் இந்தியா தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளதுள்ளது என்று இந்திய வெளியுறவித்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க:
0 Comments