இந்தியாவின் முதல் பெண் ஜாதிமதமற்றவர் என பதிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்!

இந்தியாவிலேயே முதன் முறையாக ஜாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழை வேலூரைச் சேர்ந்த சினேகா என்பவர் பெற்றுள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கு பெருமை சேர்ந்து தேசத்திற்கு  பெருமையை பெற்று தந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பார்திபராஜா. இவருடைய மனைவி சினேகா(21). இவர்களது குடும்பத்தினர் ஜாதி, மதத்தினை பின்ப்பற்றாதவர்கள்.  சினேகா எந்த சாதி, மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றார்.

இது குறித்து சினேகா கூறுகையில், ‘என்னை பள்ளியில் சேர்க்கும் போதே என்னுடைய பெற்றோர்கள் எனக்கு எந்த ஜாதியும் இல்லை என்று சொன்னே சேர்த்தார்கள். முதலில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பள்ளி நிர்வாகம், தொடர் போராட்டத்துக்கு பின் சேர்த்துக் கொண்டார்கள். இதையடுத்து கல்லூரி வரையில் சாதி இல்லாமலே படித்தேன், எங்கள் குடும்பத்தின் மீது எந்த விதமான ஜாதி, மதச்சாயம் விழுந்த விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்காகவே என்னுடைய உடன்பிறப்புகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர் என்று பெயர் சூட்டப்பட்டது. என்னுடைய கணவர் பார்த்திப ராஜாவுக்கும் ஜாதி, மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. எனவே, ஜாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தேன். தற்போது பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது’. இவ்வாறு கூறினார். 
 
 
 
இது சாதனை இந்தியா போன்ற நாட்டில் போற்ற நாட்டில் போற்றப்படவேண்டிய சாதனை, படிக்கும் பொழுது பெற்றோர்கள் இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். படித்த பெற்றோர்கள் இதுமாதிரியான சமத்துவ போக்கினை குறித்து சிந்திக்க வேண்டும். 
 
அரசு இது போன்ற குடிமகன்களுக்கு  உடனடியாக செவிசாய்த்து கௌரவிக்க வேண்டும், சினேகா இந்த சான்றிதழைப் பெற கல்லுரி மற்றும் அரசு அலுவலங்களில் போராடிதான் பெற்றிருக்கார். முதலில் மக்களை விட அரசு திருந்த வேண்டும். குடிமக்களின் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் அங்கிகரிக்க வேண்டும்.  
சினேகாவை போல் ஜாதியற்ற கொள்கை கொண்டவர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விரைந்து நடவடிக்கை எடுத்து கடமையைச் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments