வளிப் பாதையை திறப்பதற்கு முதல் உதவியாளர்:
விபத்துக்குள்ளானவரின் பக்கத்தில் முழந்தாளிட்டு நிற்றல் வேண்டும். அவர் ஒரு கையை விபத்துக்குள்ளானவரின் நெற்றியில் அமர்த்தியும் மற்றதை நாடியில் இறுகப் பிடித்தும் இழுத்தல் வேண்டும்.
விபத்துக்குள்ளானவரின் தலையைப் பின்னோக்கித் தள்ளி வைக்க வேண்டும்.
சுவாசித்தல் ஆரம்பிக்கிறதா என்பதை அவதானித்து நடவடிக்கைகள் எடுக்கவும்.
ஆரம்பித்திருந்தால் விபத்துக்குள்ளானவரை பாதுகாப்பான நிலையில் இருக்க வேண்டும். சுவாசம் ஆரம்பிக்காவிடில் செயற்கை சுவாசத்தை உடனடியாகக் கொடுத்தல் வேண்டும்.
குழந்தைக்குச் செயற்கை சுவாசம் அளித்தல்:
ஒரு குழந்தையை மிகவும் கவனமாகவும் மென்மையாகவும் கையாள வேண்டும்.
பிள்ளையின் தலையைப் பின்னோக்கித் தள்ளும் பொழுது வளர்ந்தவர்களுக்குப் பிரயோகிக்கும் பலத்தையோ வளைப்பையோ தவிர்க்க வேண்டும்.
அதன் வாயுடன் மூக்கையையும் சேர்த்து தனது வாயால் மூட வேண்டும்.
தனது சுவாச வீதத்தைவிடச் சொற்ப அதிக வீதத்தில் ஊத வேண்டும்.
மெதுவாகவும் சிறியதளவிலுமாக ஊத வேண்டும்.
குழந்தையின் நெஞ்சு மிதந்தவுடன் ஊதலை நிறுத்த வேண்டும்.
தானாக மூச்சு விடும்வரை அல்லது மருத்துவ உதவி கிட்டும் வரை செயற்கை சுவாசமளித்தலைத் தொடர வேண்டும்.
குழந்தையை மருத்துவ மனைக்குச் எடுத்துச் செல்லவும்.
1.சுவாசப் பாதைத் தடையை நீக்கவும்
2. சுவாசம் இருக்கிறதா என்பதை சோதிக்கவும்
3. தேவையானால் செயற்கை சுவாசத்தைக் கொடுக்கவும்
4. சுவாக்கசிக்க ஆரம்பித்தவுடன் பாதுகாப்பாக நிலையில் திருப்பி விடவும்.
5. பாதுகாப்பான நிலையிலேயே அவரை மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும்.
6. குடிக்கவும் உண்ணவோ, எதனையும் கொடுக்கவும் வேண்டாம்.
பிறபொருட்கள்:
சிறு பிள்ளைகளையே பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். வாய்க்குள் போடப்படும் பொருள் விழுங்கப்படலாமல்லது சில வேளைகளில் மூச்சடைப்பை ஏற்படுத்தலாம்.
சப்பாமல் விழுங்கும் உணவுத் துண்டுகளாலும் இது ஏற்படலாம்.
சிறுபிள்ளைகள்: முதல் உதவியாளன்-
சிற்பிள்ளைப் படத்தில் காட்டியப் படி
வைத்திருத்தல் வேண்டும்.
தோள் முட்டுகளுக்கிடையில் பலமாகத் தட்ட வேண்டும்.
வயது வந்தோர்:
முதல் உதவியாளன்
அவரை நன்றாக குணிய வைக்க வேண்டும்.
புயங்களுக்கிடையில் உள்ளங்கையால் பலமாக அடிக்க வேண்டும்.
முதல் உதவியாளர்:-
வளிப்பாதை அடைப்பை நீக்கி சுவாசம் இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.
உடனடியாக செயற்கைச் சுவாசம் கொடுக்கவும்.
மருத்துவ மனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கவும்.
தலைக்காயமும் மூளைச் சேதமும்:
தலைக்காயம் அனேகமாக வாகன விபத்துக்களாலும், சண்டைகளாலும் ஏற்படுகின்றது. அடியின்வேகம் மண்டையோட்டுகள் இருக்கும் மூலையை அதிரச் செய்கிறது.
ஒரு வேளை மண்டையோட்டிலோ, கடைவாயிலோ, மூக்கிலோ, முறிவுகள் ஏற்படலாம், இந்நபர் உடனடியாக தனது சுய நினைவை இழக்கலாம். சில வேலை இது பல மனிததியாலயங்களுக்குப் பின் ஏற்படலாம் இரத்தப் பொருக்கத்தால், தலைக்குள் அழுக்கம் படிப்படியாக கூடி ஒரு நிலையை அடைந்தவுன் சுய நினைவிழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து அடுத்த பதிவில் கானலாம்.
இதுகுறித்து அடுத்த பதிவில் கானலாம்.
மேலும் படிக்க:
0 Comments