தி அயன் லேடி ஃப்ர்ஸ்ட் லுக்கில் ஜெயலலிதாவாக அசத்தும் நித்யாமேனன்!

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்படும் படத்திற்கு நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5, 2016 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
 


ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது ஏற்பதாக இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்திருந்தார்.

தற்போது ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக: அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தி அயன் லேடி என்ற தலைப்பில் இப்படத்தில் ஃபாஸ்ட் நோக்கில் நித்யாமேனனின் கன கச்சிதமாகப் பொருந்தி உள்ளார். மேலும் முதல் காட்சியே அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ள அளவில் தன்னை பொருத்தியுள்ளார். அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது அயன் லேடி படமானது தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது சிறப்பாகும்.

நித்யா மேனன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரமாக வாழ்ந்த தன்னை நிரூபித்துள்ளார் என்பதை ரசிகர்கள் மற்றும் அவரது பழமொழி படங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கும் வலுசேர்த்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொடுப்பார் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்பு மக்களிடையே நிலவி வருகின்றது. வாழ்த்துக்கள் நித்யாமேனன்.

Post a Comment

0 Comments