பிஎஸ்என்எல்லின் அதிரடி சுமார்ட் டேட்டா பிளான் ரூபாய் 299க்கு பெறலாம்!

பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கவர  ப்ளான் ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டம் மிகக் குறைந்த விலையில் அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிராட்பேண்ட் திட்டமானது ரூபாய் 299 பெறலாம்.


அதன்படி வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு இலவசமாக வாய்ஸ் கால் செய்யலாம். மற்ற நெட்வொர்க்கிலிருந்து இலவச அழைப்புகளைப் பெறலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் பிராட்பேண்ட் அனைத்து வாய்ஸ் கால்களும் இலவசமாக வழங்கப்படும்.

புதிதாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக இணைவர்களுக்கு  மாதம் ரூபாய் 50 வீதம் ஆக்டிவேஷன் செய்த 180 நாட்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படும். இந்தத் தொகை 180 நாட்கள் செல்லுபடியாகும்.

இன்டர்நெட் பிளானை பொருத்தவரை ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் மாதத்திற்கு 45 ஜிபி வரை டேட்டா எட்டு எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பிஎஸ்என்எல் நோக்கிச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கடந்து பயன்படுத்தப்பட்டால் 1 எம்பிபிஎஸ் வேகத்திலும் கிடைக்கும் இருப்பினும்  அன்லிமிடெட் வசதியிலே கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து நம் டேட்டாக்களை பெறுவதைவிட அரசு நிறுவனங்களின் டேட்டாக்கள் மூலம் நமது தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

கடந்த 2015 சென்னை வெள்ள காலத்தில் மிகச் சிறப்பாக பிஎஸ்என்எல் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

என்ன இருந்தாலும் பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல் தாங்க, மேலும் தற்போதைய தனியார் நிறுவனங்களின் அதிரடி இன்கமிங் கால் திட்டங்கள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது அது பிஎஸ்என்எல் அரசு நிறுவனத்திற்குச் சாதகமாக அமையும்.

Post a Comment

0 Comments