ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காராக நிசான் கிக்ஸ் அறிமுகம்!

2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வக் காராகள் நிசான் கிக்ஸ் கார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பைச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிஷான் கிக்ஸ் கார்கள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வலம்வரும். புதிய நிஷான் கிக்ஸ் கார்களைப் பிரபலப்படுத்தும் பணிகளில் நிசான் இந்தியா நிறுவனம் முயற்சிகள் நடத்தி வருகின்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 ஆம் ஆண்டு மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதிவரை நடக்க உள்ளது.  2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ காராக நிஷான் கிக்ஸ் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


2019 ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிசான் எக்ஸ் கார்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களான பூனே, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் உலக கோப்பையை எடுத்துச் செல்லப்படும்.
நிசான் கார்கள் ஐசிசி உடன் எட்டாண்டுகளாகள் பார்ட்னர்ஷிப்  வைத்து இருந்தது. மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்தக் கார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வருவதன் மூலம் மக்கள் இதனை நேரடியாக அருகில் பார்க்கலாம். இந்த கார்கள் 2019இல் அறிமுகமாக உள்ளது இந்த கார்கள் ஐரோப்பிய ஸ்பெக்கில் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு இயங்குகின்றது.

வி பிளாட்மார்மில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்காக டெர்ரனோவின் பி0 பிளாட்ஃபார்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது இது ஐரோப்பாவின் வெளியானதை விடப் பெரியதாக இருக்கும் இதன் எஸ்யூவிகள் பல்வேறு வசதிகள் கொண்ட இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்பச் சேர்க்கப்பட்டுள்ளது இந்தக் கார்களின் விலை 11 முதல் ரூபாய் முதல் 16 லட்ச ரூபாயாக இருக்கும்.

Post a Comment

0 Comments