ஈபிள் டவர் மூடப்படும் என பிரான்ஸ் அரசு அறிவிப்பு!

பிரான்ஸில் நடைபெற்ற வரும் அரசுக்கு எதிரான மஞ்சள்  ஜாக்கெட் எனும் போராட்டம் மிகுந்த தீவிர நிலையில் உள்ளது ஆதலால் டிசம்பர் 8 ஆம் தேதி ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸில் பெருகியுள்ள வன்முறை போராட்டத்தின் காரணமாக இந்த முடிவினை அரசு எடுத்துள்ளது.

எரிபொருள்  உயர்வை திரும்பப் பெறுவது குறித்து மக்கள் மேற்கொண்ட வன்முறையை அடுத்து அரசு எரிபொருள் உயர்வை திரும்ப பெற ஒப்புக்கொண்டது. எனினும் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி மக்களின் மக்களின் போராட்டத்தை நிறுத்தவில்லை.  



முழுவதும் 89 ஆயிரம் காவல்துறையினர் உள்ளனர் தலைநகர் பாரிசில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது பாரிஸின் சாம் - எலைசீஸ் பகுதி கடைகள் நாங்கள் உணவகங்கள் அரசின் உத்தரவால் மூடப்பட்டுள்ளது. சில அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளன. இது பிரான்ஸின் மிக மோசமான வன்முறையாக கருதப்படுகின்றது.

உலக அதிசயங்களுள் ஒன்றான  ஈபிள் டவர் பிரான்ஸ் அரசுக்கு மிகுந்த பெருமையையும் அதிக சுற்றுலாவை ஈர்த்து தரும் ஒன்றாகும் அதனை காக்கவும் பிரான்ஸின் வன்முறை காரணமாக வேறு அசம்பாவிதங்கள்  தடுக்கவும் மூடப்படுகின்றது.

Post a Comment

0 Comments