அந்தமான கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவடைந்து தென் கிழக்கு வங்கப்பகுதியில் நிலவுகின்றது.
நவம்பர் 8 ஆம் நாள் தாய்லாந்து மற்றும் அதன் அருகில் தீபகற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு அந்தமானில் நிலவி வந்தது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த அந்தமான கடல் பகுதியில் நிலவி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக மாறியுள்ளது.
நவம்பர் 15 தேதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு. கஜா புயலானது 90கி.மீ வேகத்தில் காற்றடிக்கும். கஜா புயல் வார்தா புயல் போன்ற தாக்கத்தை உண்டு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டானது தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால, பாம்பன், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தேவைப்படும் அவசியமான பொருட்களை வாங்கி இருப்பு வைக்கவும்.
மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகள், கொசுவத்தி, காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் பால் பவுடர் போன்ற பொருட்களை தேவைகேற்ப வாங்கி வைக்கவும். சுற்றி நீர் தேங்காமல் கொசு உற்பத்தியாகமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்.
பள்ளி மாணவர்கள் ரோட்டோரத்தில் மழைக்காலங்களில் காத்திருந்து மழை நின்றப்பின் வீடு செல்லவும். புத்தகங்களையும் தங்களையும் மாணவர்களையும் காத்துகொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மழைக் காலங்களில் கொசு உருவாக்கத்தை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளிய மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
எலக்டிரானிக் பொருட்களை கவனமாகப் பயன்படுத்தவும். தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால் அதனை இல்லாதவர்களுக்கு மழைக்காலங்களில் கொடுத்து உதவவும்.
அரசு மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பு எண்களை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். காப்பி டீ அருந்துவதற்கு பதில் மழை காலங்களில் நீலவேம்பு கசாயம் குடிக்கலாம்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்பொழுதும் உதவிகரமாக இருக்கும் ஆகையால் அதனை முழுமையாக பின்ப்பற்றவும்.
பள்ளிகளில் நீர்த்தேக்கம் அதிகம் இருந்தாலோ மழை நீரால் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்ப்ட்டால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கற்ப்பிக்க வேண்டும்.
சுத்தமான நீர் குடிக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கொசுக்கள் உருவாகமல் தடுப்பதன் மூலம் சிக்கன்குனியா, மலேரியா நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு தெரியப்படுத்த வேணுட்ம்.
0 Comments