பனிக்காலம் மற்றும் மழைக்காலத்திற்கான மாய்ஸ்சுரைசர் வீட்டிலேயே தயாரிக்கும் முறை!

பனிக்காலம் மற்றும் மலைக்காலத்தில் தோல் பராமரிப்புக்கு வீட்டிலேயே மாய்ஸ்சுரைசர் எவ்வாறு செய்யலாம் என்பதை  அறிந்து கொண்டு அதனை வீட்டிலேயே தயாரித்து எந்த வித கெமிக்கல்கள் கலக்காமல், இயற்கையான முறையில் உங்களை நீங்களே  பாதுகாத்துக்  கொள்ளலாம். 

சரும வெடிப்பு,  தோல் வறட்சி,   வெண்மை படர்தல், மாய்ஸ்சுரைசர் இல்லா நிலையினை போக்க வேண்டுமா அதற்கு தேவையான பொருட்களை கிழே கொடுத்துள்ளோம். 

பாடிபட்டர் அரை கப் 
மாங்கோ பட்டர் அரை கப் 
சியா பட்டர் முக்கால் கப் 
பீஸ் வேக்ஸ்  கால் கப் 
செக்கில் அரைத்த நல்லெண்ணெய்
செக்கில் அரைத்த விளக்கெண்ணெய்  (ஆமாணக்கு எண்ணெய்) 
செக்கில் அரைத்த  தேங்காய் எண்ணெய் 
பாதாம் எண்ணெய் 
ரோஸ் ஆயில் 
கற்றாழை  




பனிக்காலத்தில் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் பாய்ஸ்சுரைசர் தங்கவும் தேவையான பாதுகாப்பு முறைகளை நமக்கு நாமே கையாளுதல் சிறந்தது ஆகும். அந்த வகையில் தோலில் ஆரோக்கியம் மற்றும் நீர்மைத் தன்மை மற்றும்  நிறமங்கு போக்குவதற்க்கான மாய்ஸ்சுரைசர் செய்யும் முறையினை கிழே கொடுத்துள்ளோம் அதனைப் பின்ப்பற்றி சருமத்தினை பாதுகாத்திடுங்கள். 

பாடிப்பட்டர் மற்றும் மாங்கோ பட்டர், சியா பட்டர், பீஸ் வேக்ஸ் ஆகியவற்றை ஒன்று கலந்து  கொதிக்கும் நீர்பாத்திரத்தின் மேல் மற்றொரு பாத்திரம் வைத்து அவற்றில் டபிள் பாயில் முறையில்  மேலே குறிப்பிட்ட பட்டர்களை ஒன்றாக கலந்து உருக்கவும். மேலும் அவற்றில் செக்கில் அரைத்த நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணெய்கள், தேங்காய் எண்ணெய்களை 2 மற்றும் 3 டீஸ் ஸ்பூண்கள் ஊற்றவும். பாதாம் ஆயில் மற்றும் ரோஸ் ஆயில் ஆகியவற்றையும்  ஒரு ஸ்பூன் ஊற்றி நன்கு கலந்து விடவும்.  இந்த கலவைகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் அல்லது  ரூம் டெம்பரேச்சரிலும் வைத்து பயன்படுத்தலாம். மேலும் இந்த கலவையில் கற்றாழை ஜெல்லினை இரண்டு ஸ்பூன்கள் கலந்து பயன்படுத்தும் மாய்ஸ்ரைசர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆகும். நிறமங்குகளை போக்கச் செய்து பளப்பளப்பும் கிளியர் ஸ்கின் கொடுக்கின்றது.

Post a Comment

0 Comments