திண்டுக்கல்லில் கஜா புயல் மையம் கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் மதுரை, தேனி, கரூர், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம். மேலும் திண்டுக்கல்லில் 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிமை மையம் தகவல் கொடுத்துள்ளது. மற்ற உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தகவல்.
திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள புயல் நாளை அரபிக் கடலில் கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றின் வேகம் குறைந்துள்ள முழுமையாக குறையும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள புயலால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் மாறும் எனவும் பின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அரபிக்கடலில் சேரும்.
கஜா புயல் மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் நாகை மற்றும் வேதாரண்ய பகுதிக்கு இடையே கரையை கடந்தது. இதனால பலத்த மழையானது நாகப்படினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் பெய்தது.
மேலும் படிக்க:
0 Comments