வலுகுறைந்த கஜாபுயல் விழிப்புணர்வு, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்!

தமிழக மாவட்டங்களில் கஜா புயலாள் நாகைமாவட்டம்  பெரும் அளவில் மரங்கள் விழுந்து அதிக அளவில் சேதத்தை உண்டு செய்துள்ளது. மரங்கள் விழுந்ததால் நாகையில் மின்சாரம் பாதிப்பு மீண்டும் அவற்றை சரிசெய்து மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



100 கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. சாலையோரங்களில் மர வீழ்ச்சியால் வாகனங்கள்  செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகுகின்றன. மேலும் மீட்பு பணிகளும் முழூவீச்சில் நடந்து வருகின்றது. 

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை அடுத்து உள் மாவட்டங்களில் கனத்த மழையானது பெய்து வருகின்றது. பல மாவட்ட பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

வலுகுறைந்த புயலாக மாறிய கஜா தீவிர புயலாக இருந்துவந்த வலு குறைந்த புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.  இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதிகாரம்பட்டிணத்தில் வடமேற்கில் 20. கீமி தூரத்தில் மையாமாகியுள்ளது.  

கஜாவின் வலுவானது குறைந்தாலும் அதன் தாக்கமானது  நீடித்து இருக்கும் சுமார் 80 கிமீ முதல் 100 கிமீ  வேகத்தில் காற்று வீசும்  என்று இந்திய வானிலை மையத்தால் அறிவிக்கைப்பட்டுள்ளதால். 

மழையின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் இன்னும் 6 மணி நேரத்திற்கு  மழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் குறித்து  நிவாரண நடவடிக்கைகளும்,  மீட்பு பணிகளும்,  விழிப்புணர்வு  நடவடிக்கைகளும் முழூவீச்சில் நடந்து வருகின்றது. 

விழிப்புணர்வு:

தமிழக அரசு சார்பில் தொடர்பு எண்கள் மற்றும் விழிப்புணர்வு  குறும்படங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கஜா புயலால் அதிக மழை பொலிந்து தாழ்வான  பகுதியில் நீர் சூழ்ந்தால் பொதுமக்கள் நிவாரண முகாமில் தங்க வேண்டும். டார்ச் லைட், கொசுவத்தி, மற்றும் திண்பண்டங்கள் அத்துடன், வானொலி போன்ற  தேவையான அடிப்படை  பணடங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 

ஆதார் கார்டு, ரேசன் கார்டு, சான்றிதழ்கள்  போன்ற பிற ஆவணங்களை நனைந்து தொலையாமல் இருக்க அதனை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். 
கேஸ் சிலிண்டர்கள் பொத்தான்கள் அனைத்து வைத்தல், மின்சாரம் நிறுத்தி வைத்தல் வீட்டு ஜன்னல்களை நன்கு மூடி வைத்து விட்டு கிளம்ப வேணுட்ம். 

மேலும் வெள்ளம் வருதல் போன்ற ஆபத்து வதந்திகளை பரப்ப கூடாது 

மரங்கள் அடியில் நிற்க கூடாது மேலும் வீட்டின் மேற் பகுதியில் நின்று மழை காலத்தில் வேடிக்கை பார்க்க கூடாது போன்ற அறிவிப்புகள் தமிழக அரசால் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டன.  

மேலும் படிக்க:

கஜா புயல் கரையை கடந்தது!, தமிழகத்தில் உள் மாவட்டங்களுள் கனத்த மழை

Post a Comment

0 Comments