குளிர்காலம் வந்துடுச்சு சர்ம பாதுகாப்பை இனிதே தொடங்குங்கள்!!!...

குளிகாலம் வந்தாலே சரும வறட்சி, பாத வெடிப்பு, உதட்டு வெடிப்பு, தலைமுடி வெடிப்பு என பல பிரச்சனைகள் தலை முதல் கால் வரை தோன்ற ஆரம்பித்துவிடும். அதற்காக வருத்தப்படாமல் பின்வரும் இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக உடலைப் பாதுகாத்துக் குளிர் காலத்தை இனிதே வரவேற்போம்.

தண்ணீர் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து அதனை முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் வறட்சி மறையும். தேங்காய் பாலில் உள்ள புரதம் மற்றும் இதர சத்துக்கள் சருமத்திற்க்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். இதனை உதட்டிற்கும் பயனப்படுத்தி வறட்சியை தடுக்கலாம். இதே தேங்காய் பாலை தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுத்து அதனுடன் கற்றாலை சேர்த்து தலைமுடிக்கு கண்டிஸ்னராக பயன்படுத்தி ஷாம்புவாக உபயோகித்த பின் குளித்து வந்தால் தலைமுடி வெடிப்பு குணமாகும். மேலும் தலைமுடி சீராக பளபளப்பாக இருக்கும்.

கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் உடம்பில் தடவி 10நிமிடம் வைத்து பின் அரைத்த பாசிப்பயிறு மாவு கொண்டு குளித்து வந்தால் வறட்சி மறைந்து சருமமும் நிறம் மாறும்.


ஒரு ஸ்பூன் ஓட்ஸ் பொடி(தண்ணீர் ஊற்றாமல் ஓட்ஸை நன்கு அரைத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும், இதனை ஒரு மாதம் வரை சேகரித்துப் பான்படுத்தலாம்.) இந்தப் பொடியுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து 15நிமிடம் மாஸ்க் போல் போடவும், பின் முகத்தைக் கழுவவும். இப்படிச் செய்வதானால் சருமம் வறட்சியாகாமல் தடுக்கலாம். முகம் நன்கு பளபளப்பாகும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.

தூய வெண்ணெய் எடுத்து இரவு உறங்கும் போதும் மற்றும் காலை எழுந்ததும் உதட்டில் தடவினால் வெடிப்புக் குணமாகும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.

ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சர்க்கரை எடுத்து அதனை நன்கு கலந்து உதட்டில் தடவினால் வெடிப்பு மறையும் மற்றும் உதடு சிவப்பாகும்.

பீட்ரூடை அரைத்துத் தண்ணீர் கலக்காமல் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து லிப்பாம் போல் பயன்படுத்தினால் உதடு சிவப்பு நிறமாக மாறும் வெடிப்பும் மறையும்.


குளிகாலங்களில் கை மற்றும் கால்களில் வெடிப்பு உண்டாகி வெள்ளை நிறத்தில் காணப்படும். இதனை தடுக்க பாலாடையை எடுத்து கை மற்றும் கால்களில் தடவி 15நிமிடம் கழித்து கழுவினால் வெள்ளை நிறம் மறைந்து போகும். கை கால்களும் சிறிது எண்ணெய் பசையுடன் நன்கு இருக்கும்.
பாத வெடிப்பை நீக்க இயற்கையாக மருதாணியைப் பயன்படுத்தலாம். பாதத்தை நன்கு கழுவி பின் எழுமிச்சை பழத்தினை அறுத்து அதனைக் காலில் நன்கு தடவி மஸாஜ் செய்து பின் கழுவவும். பின் மிதமான சூடுகொண்ட  தண்ணீர் எடுத்து அதனுடன் பேக்கிங்க் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து 10நிமிடம் பாதங்களை ஊரவைத்துப் பின் நன்கு கழுவவும். இவ்வாறு செய்தால் பாத வெடிப்புகள் விரைவில் மறையும்.

மேலும்ம் பாத வெடிப்பிற்கு பாதங்களை நன்கு கழுவி, சர்க்கரை மற்றும் எழுமிச்சைச் சாறு கலந்து பாதத்தில் தடவி ஊரவைத்து கழுவினால் சரியாகும். மேலும் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் இ எண்ணெய் கலந்த்தும் உபயோகிக்கலாம்.



மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற இயலாதவர்கள், அன்றாடம் ஃபேஸ்வாஸ் பயன்படுத்துபவர்கள் அதனுடன் சிறிதளவு வைட்டமி இ மாத்திரையின் இரண்டு துளிகள் சேர்த்துப் பயன்படுத்தினால் முக வறட்சி மறைந்து சருமம் சற்றுச் சமநிலையில் காணப்படும். மேழும் ஃபேஸ் கிரீம் பயன்படுத்தும் முன் வைட்டமின் இ எண்ணெய் இரண்டு துளி எடுத்து முகத்தில் தடவி மஸாஜ் செய்து பின் ஃபேஸ் கிரீம் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட இவ்வழிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக மற்றும் அரோக்கியமான உடல் நலத்தைப் பெற்றுக் குளிகாலத்தை இனிதே வரவேற்போம்.

WRITTEN BY YOUNG ICON OF SLATEKUCHI : SRIMATHI

மேலும்  படிக்க:

கூந்தலை பாதுகாக்க இயற்கையான கண்டிசனர்

Post a Comment

0 Comments