நவம்பர் 26, 2008 மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்ட நாள், இன்று பத்தாம் ஆண்டு நினைவு தினம்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கடல் வழியாக வந்த பாகிஸ்தான் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாப் 4 ஆண்டுகள் நீதிமன்ற விசாரணைக்குப்பின் தூக்கிலிடப்பட்டார்.

தீவிரவாதிகள் கடல்வழியை பயன்படுத்தி வந்தனர் அந்த படகில் பயன்படுத்திய யமஹா இன்ஜின் மூலமே இந்தச் செயலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடிந்தது.
பாகிஸ்தானின் இயக்கத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் உடன் இருந்தார்கள் என்ற தகவலும் கிடைத்தது.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் புறப்பட்டு நவம்பர் 26,2018 மாலை இந்தியாவிற்குள் 8:15க்குள் நுழைந்தனர். தங்களை தயார் செய்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை, இந்தியாவின் பல்வேறு நெருக்கடிகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு நடத்திய ரைடு விசாரணையின் மூலம் தேடியது பின் பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர் ஜகி உர் ரஹ்மான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் விசாரணை அமைப்பான எப்ஐஏ மும்பை தாக்குதல் வழக்கில் 27 பேரை குற்றவாளிகள் எனத் தீர்மானித்தது.
நினைவு அஞ்சலி :
மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கித் தவித்த போது இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறை வீரர்களும் தங்கள் இன்னுயிரைத் தந்து தேச மக்களை காத்து மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், ஹேமந்த் கார்கரே, விஜய் சலாஸ்கர், போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே போன்றோர் களத்தில் இறங்கி தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடி உயிர் நீத்தனர்.

10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாட்டு மக்களை காக்க மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தை போற்றி, தேசத்தை பாதுகாப்போம் அமைதி எங்கும் நிலவ செய்வோம்.
0 Comments