ரோஸ் வாட்டர் எனப்படும் ரோஜா இதழ் மூலம் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரின் பயன்கள் கொஞ்சம் தெரிந்திருக்கும். ஆனால் பல்வேறு தேவைகளுக்கு உபயோகரமாக உள்ள ரோஜா இதழ்களின் பயன்களை மேலும் அறிவோம். இது உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பொலிவிற்கும் சகாயமாக இருக்கின்றது.
ரோஸ்வாட்டர் நாட்டு ரோஸ் என அழைக்கப்படும் பன்னீர் ரோஜாக்களால் உருவாக்கப்படும். நாட்டு ரோஜாக்கள் வாசனை திரவியங்களை மிஞ்சும் அளவிற்கு சிறப்பு வாயந்தது ஆகும். இது பலவித தேவைக்கு உற்றத் துணையாக இருந்து வருகின்றது.
தரை சுத்தமாகவும் மனமாகவும் இருக்க ரோஸ்வாட்டர் தரையில் கிளினருடன் சேர்த்து துடைக்கும் பொழுது தரை மனமாகவும் கரைகள் படியாமல் பிரெஸ்ஸாக இருக்கும்.
ரோஸ்வாட்டர் சிறந்த மேக்கப் ரிமுவராக செயல்பட்டு முகத்திலுள்ள மாசுகளை நீக்குகின்றது. மேலும் ரோஸ்வாட்டர் காட்டனில் வைத்து முகத்தில் தடவியபின்பு போட்டப்படும் மேக்கப்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று பொலிவு தரும்.
ரோஸ்வாட்டர், கற்றாழை, வைட்டமின் சி மாத்திரைகள் இவை மூன்றையும் 1 ஸ்பூன் வீதம் கலந்து கை கால், முகம் தடவி வரும்பொழுது சிறந்த மாய்ஸ்சுரைசராக இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
கிளிசரின் டேபிள் ஸ்பூன் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு ரோஸ்வாட்டர் கலவையினை கை,கால், முகம் தடவி 20 நிமிடம் ஊரவைத்து கழுவும் பொழுது இவை மூன்றும் சிறந்த சருமத்திற்கு புத்துணர்ச்சி குளோ கொடுப்பதுடன் பீளிச்சாகவும் செயபல்படுகின்றது.
தேங்காய் எண்ணெயயை டபுள் பாயில் முறையில் சூடாக்கி அது ஆறிய பின்பு ரோஸ்வாட்டரினை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்புகளில் சேர்த்தால் தலைமுடி மிருதுவாகும் கூந்தல் வேர்க்கால் முதல் உச்சந்தலைவரை தடவி அரை மணி நேரம் விட்டு கூந்தலை அலசலாம்.
சருமத்தில் வெய்யினால் ஏற்படும் மாசு மங்கு போக்கி, நிறம் கொடுக்க ரோஸ்வாட்டர், கடலை மாவு, தயிர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம்.
உளுந்து பொடியுடன் ரோஸ்வாட்டர் சந்தனம் கற்றாழை ஜெல்லினை கலந்து தடவி 5 முதல் 8 மணி நேரம் கழித்து அதனை குளிர்ந்த நீரால் கழுவும் பொழுது அக்னி மற்றும் பள்ளம், முகப்பரு தழும்பு ஆகியவற்றை இது சரி செய்யும்.
காட்டனில் ரோஸ்வாட்டரை நனைத்து சருமத்தில் ஒத்தடம் கொடுப்பது போல் கொடுத்து வர வேண்டும். மேலும் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்வாட்டர் கலந்து மேலும் தேவைப்பட்டால் தேன் கலந்து பூசும் ரோஸ் வாட்டர் மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் வரண்ட சரும சிக்கலை தீர்க்கும்.
ரோஸ் வாட்டரை கொண்டு தினமும் இரு வேளை குடித்துவந்தால் உடலின் ஊஷ்ணம் குறைந்து குளிர்ச்சி உண்டாக்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ரோஸ்வாட்டர் கலந்த குளிர்ந்த நீரினை தினமும் காலையில் முகத்தில் ஒத்தனம் கொடுக்கும் பொழுது முகம் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.
ரோஸ்வாட்டர் கலந்த குளிர்ந்த நீரினை தினமும் காலையில் முகத்தில் ஒத்தனம் கொடுக்கும் பொழுது முகம் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.
மேலும் படிக்க:
0 Comments