யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வழங்கும் பெண்களுக்கான இந்திரா காந்தி ஸ்காலர்சிப் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
வீட்டில் ஒரே பெண்ணாக இருப்பவர்கள் முதுகலைப் பட்டதாரியாக எம்ஏ, எம்எஸ்சி படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
யுனிவர் சிட்டி கிராண்ட் கமிசன் இணைய லிங்கில் கல்வி உதவித்தொகை குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிவிக்கை கிடைக்க பெறலாம் அதனை முழுமையாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.
பிஜி டிகிரி படிக்கும் வீட்டிற்கு ஒரு பெண்ணாக இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 37,200 கல்வித் உதவித்தொகையாக மத்திய அரசு வழங்குகின்றது.
பெண்கல்வியை ஊக்குவிக்கவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்பை அதிகப்படுத்த கொடுக்கப்படும் இந்த கல்வி உதவித்தொகையை பெற தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 30, 2018 இந்திராகாந்தி சிங்கில் கேள் சைல்ட்டு ஸ்காலர்சிப் பெற அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். மேலும் 30 வயதுள்ள மாணவிகள் மட்டும் இந்த கல்வி உதவித்தொகை பெறலாம்.
மேலும் தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் கார்டு, வங்கி தகவல்கள் அனைத்து விவரங்களும் முறையாக சமர்பிக்க வேண்டும்.
0 Comments