8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, கஜா புயல் நிவாரண பணிகளில் தீவிரம்

தென் கிழக்கு வங்கக் கடலில்  காற்றழுத்தத்  தாழ்வு  பகுதி உருவாகி உள்ளது. கஜா புயலை தொடர்ந்து மற்றொரு  புயல் தமிழக மாவட்டங்களில்  உருவாகியுள்ளது.  இதன் பொருட்டு  மழை  பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

தென்கிழக்கு  வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு  வலுப்பெற்றுள்ளதால் கடலோர மாவட்டங்களில்  மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். 

நாளை முதல் நாளையும், மறுநாளும் உள் மாவட்டங்களில் மழையின் வாய்ப்பு அதிகம் இருக்கும். இதனால் பள்ளி, கல்லுரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலை கழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான தேர்வுகள் மாற்றப்பட்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தேர்வு எழுதஅறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில்  இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில்  உள்ள தகவல்கள் அடிப்படையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்  பகுதி புயலாக மழைப் பொழிவை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம். 

டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை கஜா புயலினால் மழை பெய்யும்.  மேலும் கஜா புயல் சேதங்களைக் கணக்கெடுக்கக்  ககன் தீப்சிங் பேடி தலைமையில் மதிப்பீடுகளைச்  செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

 நிவாரணம்:

 

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர். நிவாரண பொருட்களை  முறைப்படிக் கொண்டு சேர்க்க பலர் முயன்று வருகின்றனர்.

திருவாரூர் கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் தீவிரமாகச்  செயல்பட்டு வருகின்றனர். 

சில பகுதிகளில்  கொசுவிரட்டி மற்றும் தண்ணீர், பெட்சீட் போன்ற பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது.  மேலும் பணத்தை விட நிவாரண நிதியாக  94443663922, 9443663164 என்ற எண்களுக்குத்  தாசில்தார் ராஜன்பாபு சொக்கநாதன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பமுள்ளோர்  தாசில்தார் சுரேஷ் 9655563329 என்ற எண்ணில் அழைக்கலாம். 

மேலும் படிக்க:

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் மழை வாய்ப்பு!

Post a Comment

0 Comments