ஆறாவது முறை உலகக்கோப்பை சாம்பியன், வெற்றியை நாட்டுக்கு சமர்ப்பிக்கும் மேரிகோம்!

எனது வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றேன் என்ற கம்பீரம் கண்களில் வெற்றி பனித்துளிகள்  உள்ளத்தில் நெகிழ்ச்சி இது நமது நாயகிக்கு புதிதல்ல இது போன்று 5 முறை வென்றுள்ளார். இது ஆறாவது  உலகக் கோப்பை மகளிர் குத்துச் சண்டைப் போட்டி,  மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். 

உலகக் கோப்பை மகளிர் குத்துச்சண்டைச் சாம்பியன் போட்டி இந்தியாவில் டெல்லியில் 2018 ஆம்  ஆண்டுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. 



இதில்   நடப்புச் சாம்பியன் ஆன மேரிகோம் 48 கிலோ பிளைவெயிட் பிரிவில்  பங்கேற்றார். இன்று நடைபெற்ற போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை எதிர்கொண்டார். 

3 சுற்றுகள்  போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்தியாவின் மேரிகோம் பதக்கத்தை  வென்றார். 6வது முறையாக மேரிகோம் வெல்லும் இந்தச் சாம்பியன் பட்டம், உலக வரலாற்றின் புதியதொரு சாதனையாகும். 2002, 2005, 2006, 2008, 2010, 2018 ஆகிய வருடங்களில் தங்கப் பதக்கத்தை வென்றார்.  மேரிகோம் பெற்ற 6 உலககோப்பை சாம்பியன்சிப் பதக்கமானது இதுவரை உலகில் அயர்லாந்தின் கார்டி டெய்லர் வென்ற சாதனையை முறியடித்துள்ளது.

3 குழந்தைகளுக்குத் தாய், 35 வயது, வடகிழக்கு மாநிலங்களிலிருந்து போராடி குத்துச்சண்டைப் போட்டியில் நின்று வென்று இன்று சாதித்துள்ளார். 
வெற்றி மகிழ்ச்சியின் நான் இந்த வெற்றியை  எனது தாய்நாட்டிற்குச் சமர்ப்பிக்கின்றேன் என தேசத்தை நெகிழச் செய்துள்ளார். 

மேரிகோமுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும் பரிசு அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது,  நாமும் மேரிக்கோமுக்கு  வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

2020 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அடுத்தக் கனவும்  வெல்ல வாழ்த்துக்கள் மேரிகோம். 

சோனியா வெள்ளி பதக்கம்: 
2018 ஆம் ஆண்டின் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீராங்கணையான சோனியா 57 கி.கி பிரிவு பைனலில் ஜெர்மனி யின் கேப்ரியலா வானரை எதிர்கொண்டு வெற்றி  வாய்ப்பை இழந்தார். மேலும் இவர் முதல் உலகச் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பியோடத்தக்கது. 

மேலும் படிக்க:

ஏமா! ஹீமா நீதாமா நிஜ ஹீரோயினி இளைஞர்களுக்கான தூதுவராக நியமித்து யுனிசெப் அறிவிப்பப்பு!

Post a Comment

0 Comments