கற்றாழை எண்ணெய் வீட்டிலே எளிதாக செய்யலாம்.!

கற்றாழை ஹேர் ஆயிலுடன்  தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரித்து தலைமுடி வளர்ச்சிக்கு உற்ற மருந்தை வீட்டிலேயே செய்து   கூந்தல்  வளர்ச்சியை தூண்டி  காக்கலாம்.


வீட்டிலேயே ஹேர் ஆயில் கற்றாழை மூலம் தயாரித்து பட்டுப்போன்ற கூந்தலை பாதுகாக்கலாம்.  கற்றாழை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்
 வெந்தயம் 
கருவேப்பிலை 
கற்றாழை

செய்முறை: 
கற்றாழை தலைமுதல் பாதம் வரை உற்ற துணையாக இருந்து வருகின்றது. இதனை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம். கற்றாழை உடல் ஆரோக்கியத்திற்கும் அழகினை பாதுகாக்கும் சிறந்த அம்சமாக இருந்து வருகின்றது. 

வெந்தயத்தை தேவையான அளவு எடுத்து கற்றாழையின் நடுப்பகுதியை இரண்டாக வகுந்து அவற்றில் வெந்தயத்தை நடுவில் வைத்து  இரண்டு நாட்கள் சோற்றுக் கற்றாழையில் ஊரவிட வேண்டும். 

வெந்தயத்தை சோற்றுக் கற்றாழை மேல் படர ஊரவைத்து கற்றாழையின் இருப்பகுதிகளை இணைத்து வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் களித்து சோற்று கற்றாழை மற்றும் வெந்தயத்தை வானலியில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தப்பின் இறக்கி காயவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை மறையும், இயற்கை கண்டிசனர் கிடைக்கும். முடி  வெட்டு மறையும், தலைமுடி மிருதுவாகி ஜொலிஜொலிக்கும். 

வெந்தயம் உடல் வெப்பத்தை சமப்படுத்தி காது  தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கின்றது. கற்றாழை எண்ணெய்  உடலில் தேய்த்து குளித்தால்  உடலின் இயற்கையான மாய்ஸ்ரைசர்  காக்கப்படும்.   நிற மங்கு போக்கப்படும்  சருமம்  தெளிவாக மிளிரும்.

கற்றாழையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் தோலில் உள்ள தேவையற்ற அழுக்குகள் மற்றும் தொற்றுகளை போக்குகின்றன. தோலினை மிருதுவாக்கி பளபளப்பை தங்கச் செய்கின்றன.  

கற்றாழையுடன் இணைந்து  ஊட்டச்சத்தினை தேங்காய் எண்ணெய் அதிகரிக்கின்றது. தேங்காய் எண்ணெய் எண்ணெய்களின் கடவுளாக சிறந்த ஒரு காயகல்ப மருந்தாக  இருக்கின்றது. கருவேப்பிலையும் சிறந்த தலைமுடி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கின்றது.

Post a Comment

0 Comments