மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.
ஸ்டாப் செல்கசன் கமிசனின் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர், ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், ஹிந்தி பதிப்புகள் போன்ற பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
ஜூனியர்
டிரான்ஸ்லேட்டர்
|
வயது வரம்பு
|
30 வயது
வரை
|
கல்வித் தகுதி
|
பணிகளுக்கு
ஏற்ப முதுகலை பட்டம்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
அறிவிக்கையின்படி
|
சம்பளம்
|
ரூபாய்
35,400- ரூபாய் 1,12,400
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
நாடு முழுவதும் பணியிடம் கொண்ட எஸ்எஸ்சியில் பணியாற்ற அங்கிகரிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தில் முதுகலைப்பட்டம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அத்துடன் ஹிந்தி பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிரான்ஸ்லேட்டர் பணிக்கு ஆங்கிலம் கட்டாயம் கொண்ட படிப்பை ஹிந்தியுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அந்தந்த பிரிவினருக்கு விதிமுறையின்படி வயதுவரம்பில் சலுகையுண்டு.
ஸ்டாப் செலக்சன் துறையில் பணிவாய்ப்பு பெற கணினி முறையில் அப்ஜெக்டிவ் தேர்வுகள் நடைபெறும். மேலும் அவற்றில் தேர்ச்சி பெறுவோர்கள் விளக்கவுரை தேர்வான டிஸ்கிரிப்சன் தேர்வு அழைக்கப்படுவார்கள் அதன் பின் அதில் தேர்ச்சி பெற்றோர் டாக்குமெண்ட் வெரிபிகேசனுக்கு அழைக்கப்படுவார்கள்.
கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை .
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை பெற்று முழுவதுமாக படித்துப் பார்த்து அனைத்து விவரங்களும் முறையாக கொடுக்கப்பட வேண்டும். அதன் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரிதான என மீண்டும் சரிசெய்து சப்மிட் செய்ய வேண்டும். புகைப்படங்கள் மற்றும் கையெழுத்து சரியான அளவில் இணைக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 10, 2018 ஆகும்.
கணினி முறையிலான தேர்வு நாள் (தாள் 1) ஜனவரி 12.01.2018 ஆகும்.
விளக்க முறையில் தேர்வு நாள் (தாள் -2) பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க:
0 Comments