ரஜினியின் அடுத்தடுத்த அரசியல் அறிக்கைகள்!!

ரஜினி அரசியல்  தீபாவளி நேரத்தில் இன்னும்  சரவெடியை கிளப்புகின்றது. தொடர்ந்து பேட்ட படப்பிடிப்புகள்  என பல்வேறு பணிகளிடையே ரஜினியின் அரசியல் பணிகள் சூடுப்பிடிக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு   முன்பு ரஜினி  வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்றத்தில் 40 ஆண்டுகள் இருப்பாதாலேயே பதவிகள் வழங்கப்பட மாட்டாது, என்றும் மக்கள் மன்றத்தில்  ஒழுங்கு நடவடிக்கை குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும்  தனது பார்வைக்குட்ப்பட்டு நடக்கின்றன, என அவர் வெளியிட்ட அரசியல் அறிக்கை  அவரின் வெளிப்படைத் தன்மையை வெளிக்காட்டுகின்றது என்று கூறலாம்.


ஏற்கனவே அரசியலில் ஈடுப்படுவதற்கான  பணிகள் முழுவீச்சில் நடைபெற்று  வருகின்றது எனவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து  தெரிவித்திருந்தார்.  

இதனிடையே மக்கள் மன்றத்தில்  ஒழுங்கு நடவடிக்கை  காரணமாக கடலூர் மாவட்ட   கௌரவ செயலாளராக இருந்த ஓ.எல்.பெரியசாமி, விருதாச்சலம நகர செயலாளர் ரஜினி பாஸ்கர், விருத்தாச்சலம் துணை செயலாளர் தென்றல் முருகன் உள்ளிட்ட 10 பேரை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் சமீபத்தில் நீக்கியிருந்தார்.  இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தை அறிந்த ரஜினி  உடனடியாக  அறிக்கை ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்திருந்த்தார். 

ரஜினி வெளியிட்டிருந்த அறிக்கையில் பதவி என்பது பணத்திற்காக இருக்க கூடாது என்றும் சுயநலமாக இருந்து கட்சியில் பணியாற்றுபவர்களுக்கு இடம் இல்லை மேலும் குடும்பத்தை கவனிக்காமல் கட்சிப் பணியை மட்டுமாற்றக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

ஊடகங்களின் வாயில்  தீனியாக்கப்பட்டிருக்கும் நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் இந்த அறிக்கையால்  உண்மையை உணர்ந்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர் மக்கள் மன்றத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை மூலம்  நீக்கப்பட்டவர்கள். 

சுறுசுறுப்பு: 
தமிழ்நாட்டில்  ரஜினி அரசியல் கட்சி பேச்சு தொடங்கிய நாள் முதல் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றார்.   ரஜினி அரசியலுக்காக தொடங்கிய மக்கள் மன்றம் முழூ வீச்சில் மாவட்டங்கள் தோறும் இயங்கி கொண்டிருக்கின்றன. அரசியலில் ஈடுபடப் போவதாக அறிக்கை  கொடுத்த நாள் முதல் அவரின்  அடுத்தடுத்த செயல்பாடுகள் அனைத்தும்  அரசியல் பணியில் இருப்பதைனை காட்டுகின்றது. 

மேலும் ரஜினி  ரசிகர்களிடையே காலதாமதம் குறித்து  மக்கள் மன்ற வட்டாரத்தில் கேட்கப்பட்ட பொழுது  அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முழுமையான கிரவுண்ட் ஒர்க்கில் ஈடுப்பட்டுள்ளார். தேவையான  அடிப்படை கட்டமைப்புகள் முடிந்ததும் அனைத்து அறிவிப்புகளும் வெளியிடப்படும் என தகவல்கள் கொடுத்துள்ளனர். 

சினிமாவில் ஸ்டாராக தன்னை   தமிழ் மக்களிடம்  நிலைநிருத்தி வெற்றி  கண்டவர் நடிகர் ரஜினிகாந்த். அவ்வாறே அரசியலிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று  தனக்கு எதிராக கொடுக்கப்படும் அனைத்து  கருத்துக்களையும் அமைதியுடன் உள்வாங்கி  எந்த பதிலும் கொடுக்காமல் இருந்தார் செயலில் காட்ட நினைக்கின்றார்  என்பது மக்கள் கருத்து .  

ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்பு  மனம் திறந்துள்ளார் ரஜினி: 
மக்கள் மன்றம் தொடங்கி செயலாற்றி வந்த நிலையில் அங்கு நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும்  தனது கவனுத்துக்குட்ப்பட்டு நடைபெறுவாதாக கூறிய ரஜினி அவர்கள், இன்று அவர் வெளியிட்ட அறிக்கையின் மூலம்  தான் வெளியிட்ட உண்மைகளை உணர்ந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும்,  "உங்களையும் போன்ற ரசிகர்களால் நான்  பெருமிதம் கொள்கிறேன் என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது, நாம் செல்லும் பாதை நியாயமானதாக இருக்கும் இறை அருள் என்றும் நமக்கு துணை" என்று  தெரிவித்தார். 

பேச்சில்  முதிர்ச்சி: 
ரஜினியிடம்  விவேகம் கலந்த பேச்சும் செயல்பாடும் நிறைந்து காணப்படுகின்றன.  தமிகத்தில் அரசியல்  கால் ஊன்ற தான் சந்தித்து வரும் அனைத்து எதிர்மறை விமர்சனங்களை பொருட்படுத்தாது சிறப்பாக செயல்பட்டு வருகின்றார், என்பது அவரது அறிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ரஜினியின் இந்த செயல்பாட்டினால் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் குறித்து  எதிர்மறை கருத்து  பேசியவர்களுக்கும் புரிய வைத்திருக்கின்றார்.

மேலும் : 

Superstar Rajinikanth's striking announcement to his office bearers

Post a Comment

0 Comments