மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல படியுங்க!

 குருப் 2 தேர்வை வெல்ல மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள் குறித்து தேர்வர்களுக்கு ரிவிசன் பகுதியாக இருக்க இந்த குறிப்புகளை கொடுத்துள்ளோம். குரூப் 2 தேர்வின் முதன்மை மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இவை மிகுந்த உபயோகமாக  இருக்கும். 

கிஷான் விகாஸ் பத்ரா:
கிஷான் விகாஸ் பத்ரா 1988 இல் இந்திய அஞ்சல் துறையால் துவக்கப்பட்டது. செயல்பட்ட காலம் 1988 முதல் 2011 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. மீண்டும் கிஷான்  விகாஸ் பத்ரா மீண்டும் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

சேமிப்பு பத்திரத் திட்டம் இதன் முக்கிய  நோக்கமாகும்.  பல்வேறு பணமதிப்புகளில் அஞ்சல் அலுவலகங்களில் பத்திரங்களை வாங்கி முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் வசதிப்படுத்துதல் ஆகும்.  கிஷான் விகாஸ் திட்டம் ஏழை விவசாயிகளுக்கு உதவி அளிக்கப்பட்டது.
இந்தியாவின் அஞ்சல் துறை மூலம்  கிஷான் விகாஷ் செயல்படும்.



அஞ்சலத்தில் ரூபாய் 1,000, 10,000 மற்றும் 50,000 மதிப்புடைய முதலீட்டு பத்திரங்கள் கிடைக்கும். இவற்றில் 8.7% வட்டியை கொடுக்கும். 100 மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் முதலீட்டின் மதிப்பு இரு மடங்கு உயரும் என்பது இதன் செயல்பாட்டு முறையாகும்.

இடைப்பட்ட காலத்தில் முதலீட்டு  பத்திரத்தின் பணம் வேண்டுமெனில் 30  மாதங்கள் அதாவது 2 ஆண்டு 6 மாதங்கள் கழித்துதான் பெற  முடியும்.

கிரிஷி அம்தானி பீமா  யோஜனா:
கிரிஷி அம்தானி  திட்டமானது  ஜூன் 2, 2014 இல் வேளாண் காப்பீடு இதன் முக்கிய நோக்கமாகும்.
எதிர்பாரா வானிலை நிகழ்வுகள் அல்லது வேறு பிற காரணங்களினால் வேளாண் உற்பத்திப் பொருட்கள் பாதிக்கப்படும் பொழுது இத்திட்டமானது உழவர்களுக்கு உதவுவதாகும்.
சிறு மற்றும் குறு விவசாயிகள்  இத்திட்டத்தில்  பயன் பெறுபவர்களாவார்கள்.

பிரதான் மந்திரி கிரிஷிசின்சாய் யோஜனா:
பிரதான் மந்திரி கிரிஷிசின்சாய் யோஜனா    2015 முதல் 2016 இல்  நிறைவேற்றப்பட்டது. 2019 முதல் 2022 வரை நடைபெறும். 

நுண் நீர் பாசனம்  நோக்கமாக கொண்ட பிரதான் மந்தீ கிரிஷி சின்சாய் யோஜனாவில் உறுதி செய்யப்பட்ட நீர்பாசனத்தின் கீழ் வேளாண்  பயிற்செய்யக்கூடிய பகுதிகளை விரிவுப்படுத்துதல் மற்றும் வேளாண்மையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் மற்றும் வேளாஅண்மையில் நீடித்த பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்டுத்துதல் பண்ணைகளில் நீருக்கான அணுகலை மேம்படுத்துதல். 

பிரதான் மந்திரி கிரிஷிசின்சாய் மத்திய மாநில அரசுகளினால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது நபார்டு வங்கி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. 
திட்டக்கூறுகள் இத்திட்டமானது மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் பின்வரும் மூன்று முந்தைய திட்டங்களை உள்ளடக்கியதாகும். 
மத்திய நீர்வள அமைச்சகத்தின் துரிதப்படுத்தப்பட்ட நீர்பாசன பயன்பா பயன்திட்டம்  ஆகும். மத்திய  ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நீர்பிடிப்பு மேலாண்மைத் திட்டம் ஆகும். 
நீடித்த வேளாண்மைக்கான பண்ணை நீர் மேலாண்மைத் தேசியத் திட்டம்  போன்றவற்றை உள்ளீடகாக கொண்டது. 

பரம்பராகத் கிரிஷி விகாஷ் யோஜனா:
 பரம்பராகத் கிரிஷி விகாஷ் யோஜனா  திட்டம் 2015 இல்  தொடங்கப்பட்டது. 
இயற்கை அங்க மேலாண்மை செயல்பாட்டை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது 
 சுற்றுசூழலுக்கு உகந்த வேளாண் சாகுபடி முறை ஏற்றுக் கொண்டு அதனை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவித்தல் ஆகும்.  
வேளாண்மையில்  விளைச்சலை அதிகரிக்க இராசயனங்கள் மற்றும் செயற்கை உரங்கள் மீதான விவசாயிகளின் சார்புடைமை குறைத்தல் ஆகும். அம்லபாட்டு நிறுவனம் மத்திய வேளாண்மை அமைச்சகம் ஆகும். 
ஒரு திறள் தொகுப்பு அணுகுமுறை இது ஐயக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இயற்கை அங்கக வேளாண்மைக்கான அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கியதாகும். 

எம்டி முக்தா பாரத்: 
ஆகஸ்ட் 9, 2016 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது கோமாரி நோயினை ஒழித்தல் ஆகும்.  கோமாரி நோயானது ஓர் தொற்றுநோயாகும். ஒரு சில வேளைகளில் இது உயிர்கொல்லி  நோயாகும்.  இந்நோயானது உள்நாட்டு மற்றும் காட்டி எருமைகள் உள்பட வெட்டுக் குளம்புடைய விலங்குகளை பாதிக்கின்றது. 

அலங்காகார மீன்கள் வளர்ப்புத் திட்டம்: 
மார்ச் 2017 அலங்கார மீன்கள் வளர்ப்புத் திட்டமானது மார்ச் 9, 2017 இல் தொடங்கப்பட்டது. நாட்டின் அலங்கார மீன் வளர்ப்புத் துறையின் ஆற்றலை வெளிக் கொணர்தல் 
திரள்  தொகுப்பு அடிப்படையிலான அணுகு முறையோடு நாட்டில் அலங்கார மீன்கள் வளர்ப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துதல் ஆகும். மேலும் அலங்கார மீன் களின் வரத்தகம் அதிகரிக்கச் செய்தல் ஆகும்.  ஊரகம் மற்றும் நகர்புபுற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும். 
இத்திட்டத்திற்கான நிதியளிப்பு நீல புரட்சித் திட்டத்தின் மேல்வாரியின் கீழ் இத்திட்டத்தில் நிதியளிப்பு முறை உள்ளது.

மேலும் படிக்க:

ஆசிய விளையாட்டு போட்டிகளின் குறிப்புகள் 2018!!!!!!!

Post a Comment

0 Comments