ஒருபாடல், ஒரு வாழ்கை, ஒரு காதல்

எந்திர உலகில் ஓடிகொண்டிருக்கும் இயந்திர மனிதர்கள் நாம் 21 நூற்றாண்டில் இலுமினாட்டிகள் கைப்பாவையாக வாழும் நாம் என பல்வேறு விமர்சனங்கள் சமூக சிக்கல்கள் அவலங்கள் நிறைந்த இந்த சமுதாயத்தின் இருப்பு சாத்தியப்படுகிறதென்றால் அது அன்பு, கருணை, விட்டுகொடுத்தல், புரிந்துணர்வு, ஒன்றுப்பட்டுதல் வாழும் குணமே ஆகும். 

கணினி மடியிலே கண்முன்னே அலுவலக பணி சுமையிலே கண்ணை சொக்கும்  கலைப்பின் வேளையில் கேட்டேன் கண்களில் பணித்துளிரகள் பணிந்தன. உள்ளம் பாந்தமானது மறந்து போனது  உலகை, மந்திரப் புன்னகையும் என்றும் மாறாத இந்த மனித காதல் வரிகள் ஜோக்கர் படத்தில் பார்த்த காதல் தேடல்,  கலையாத அந்த காதல் வரிகள் கட்டிப் போட்டன என்னை அறியாமலேயே எழுத தூண்டியது. நன்றி கவிஞருக்கும் அதனை  உருவாக்கிய குழுவுக்கும்.
காலம் என்ன நவநாகரீகமானானும் மாறாதது காதல் என்ற அந்த பட பாடல் வரிகள் உணர்த்தியது.
 நாயகர் பெயர் மன்னன் அவரது காதல் மனைவி செல்லம்மாவுக்கான வரிகள் அதிலே அவர்களின் வாழ்க்கை  தெரிகின்றது.  காதல் மனைவி விபத்தில்  படுத்த படுக்கையாகி கிடக்கும் பொழுதும்  காதலிக்கின்றான். அவளுக்கு கருணை கொலை  அரசு அனுமதிக்காக  வேண்டி அரசு அனுமதிக்காக காத்துக்கிடக்கின்றான். உச்சநீதிமன்றம் வரை சென்றும் நீதிகிடைக்கவில்லை.


நாகரிக மாற்றத்தால் நைந்து போய கிடக்கும்  மனிதர்களான நமக்கு இது ஒரு நல்ல பாடம். நேற்று பார்த்து, இன்று ஊர்சுற்றி நாளை பிரியும் நமது நவநாகரீக யுவ, யுவதிகளுக்கான சரியான சவுக்கடியாக இருக்கும். காதலின் ஆழம் அதன் நீளம் குறித்து அறிந்த கொள்ள இதோ அந்த அழகு வரிகள். 
ஊருக்கு அவன்  கிறுக்கு உள்ளத்தில் அவன் உத்தமன் அந்த உத்தம காதலை நாம்  வரிகளில் காணலாம்.


செல்லம்மா செல்லம்மா !!!!!

சின்னாத்து மண்னே என் பொண்ணே
என்னம்மா என் செல்லம்மா
மன்னன் மன்னனுக்கு நீ என்றும் செல்லம்மா,,,,
குட்டியிடும் ஆட்டுக்குட்டியில் உன்னைக் காண்கிறான்
காத்திருந்து கதைபேசிய உன்னை
காத்து காத்து கண்ணீர்ப் பூர்த்துப் போகவைகிறான் !!!!
கட்டிலிலே உன்னோடு கதைபேசியவன்
நீ கட்டிலிலே நடைபிணமாய் வாழூம்போதும்
உன்னோடு கதைபேசுகிறானே இவன்,,, 
நீதானம்மா அவன் செல்லம்மா !!!!!
ஊருக்கு அவன் கிறுக்கு உனக்கு எனக்கும்தான் அவன் மிடுக்கு !!!!!
உன்னோடு வாழ்ந்த வாழ்வோடு ஊர்வாழ போராடுகிறானே
நடப்பு நிகழ்வை நடக்கமுடியாத உன்னிடமிருத்துகிறானே
செல்லம்மா அவன்தானம்மா உன்மன்னாதி மன்னனம்மா !!!!
ஊருக்கு உழைத்து உனக்கு ஊட்டுகிறானே செல்லம்மா !!!,,,,
ரோசாத் தோட்டத்தில் பார்த்த ராசா அவன் ,,,,,,
தலைநகரில் நின்று நீதீகேட்டு உனக்கு உயிர்விடுதலைத்தர
தரையில் நிற்கிறானே தாயே நீ அறிவாய் செல்லம்மா ,,,,
ஊர்விட்டு ஊர்ச்சுற்றி உனைக்காண மையில் கடந்தான் செல்லம்மா
உயிர்விட்டுப்போகிறான் தெரியாமல் நீ வாழ்கிறாய் செல்லம்மா!!!!,,,,
குடுத்துவைத்தவள் நீயம்மா செல்லம்மா !!!!
உன்சிரிப்பில் வாழ்ந்தான்
உனதுயிரில் வாழ்கிறான் செல்லம்மா !!!

மேலும் படிக்க:
 உணர்வுகளின் சங்கம் காதல்!

Post a Comment

0 Comments