உலகம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு கொள்கையின்படி
உருவானது. உலகத்தில் ஜீவராசிகள் உயிர்த்தெழ ஆரம்பித்தன.
ஒன்று
பட்டிருந்த கடலும் நிலமும் முடிவில்லாத
வாழ்க்கை பயணத்தை நோக்கி துடுப்புகளை
அசைக்கத்தொடங்கின.
ஆம்
இறந்தகாலம் முதல் எதிர்காலம் வரையிலும்
உலகம் பல மாற்றங்களை சந்தித்து
வருகின்றது. அதன் சாட்சியாக இன்றைய
செய்திகள் நாளைய வரலற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அன்று முதல் இன்று
வரை மாறாத ஒன்று.
உணர்வுகளின்
சங்கமம் உயிர்களின் ஆதி என்றால், சட்டென்று
சொன்னால் அது நிச்சயம் அன்பாகத்தான்
இருக்கும். அன்பு என்பது தாய்,
தந்தை, அண்ணன், தம்பி ரத்த
பந்த உறவுகளுடன் ஆரம்பமாகின்றது. ஆனால் அன்பின் அடுத்த
பரிமானம் என்றால் நிச்சயம் காதலாகத்தான்
இருக்கும். அது பல பயணங்கள்
நூற்றாண்டுகள் கடந்து உலாவி வருகின்றது.
உலகில் விலைமதிப்பற்ற அன்புக்கு அச்சாணி என்றால் அது
நிச்சயம் காதலாகத்தான் இருக்கும்.
காதல்:
காதல்
ஆண், பெண் இருவருக்குள்ளும் இயற்கையாக
ஊற்றெடுக்கும் ஊற்றாகும். ஆதிமனிதன் இலை, தலை அணிந்த
காலம் முதல் இன்று இன்டர்நெட்
காலம் வரை தொடர்ந்து மனித குலத்தில் பயணிக்கும்.
வாழ்க்கை மாற்றத்தை நோக்கிய பயணத்தில் உலாவி
கொண்டிருக்கிறது.
காதல் பலமொழிகளில், பலவடிவங்கள், பலவண்ணங்களில் கூறப்பட்டாலும் அது வெளி உலகத்திற்கு
தெரியாத உணர்வை நோக்கிய முடிவில்லாத
பயணம்தான். காதலில் உலகத்தையே வென்ற
ஷாஜகானாக இருத்தலும் தினம்தோறும் கூலிக்கு மாரடிக்கும் கூலி வேலைசெய்பவனாக இருத்தலும்
காதலில் இருவருக்கும் கோட்பாடுகள் ஒன்றே!!!...காதல்.
காதல்
அன்பை கடந்த ஓர் அற்புதமான
உணர்வு. முதல் காதல் ஒரு
பதின்பருவத்தில் வரும், மீசை அரும்பியதும்
வரும், இப்பொழுது வரும் எப்பொழுது வரும்
என ஆளுக்கொரு நியதிகள், அனுபவங்கள் ஆனால் அது எப்பொழுது
வரும் எதற்காக வரும் என்று
கணிக்க முடியாமல் அரும்புவதே காதல்.
நட்பும் காதலும்:
காதலில்
நட்பும், காதலும் வெவ்வேறு துருவம்
என்கின்றோம். காதலுக்கும் நட்புக்கும் வெவ்வேறு வரையரைகள் உள்ளன. நட்பே நாங்கள்,
இதுவே எங்கள் அடையாளம் என்று
வாழ்பவரும் உண்டு. இல்லை நட்பாக
இருந்தோம் இனி இறுதிவரை ஒன்றாக வாழ வேண்டும்
என்பதால் இடையில் காதலாகிவிட்டோம் என்று கூறுவோரும் உண்டு.
நட்பின்
மையத்திலிருந்தே காதல் அரும்புகிறது. காதலின்
சாட்சிபீடம் நட்பிலிருந்து பிறக்கின்றது. காதலின் வெற்றி திருமணத்தில்
என்பார்கள். ஆனால் காதலின் வெற்றி
என்பது காலம் காலமாக மேலும் காலங்களை
கடந்து காதலோடு இருப்பதில் உண்டு.
ஆம் கண்ணன் மகாபாரதத்தின் நாயகன்
தன் முதல் காதலான ராதையின்
மீதுள்ள காதலை என்றும் மறுத்ததில்லை,
மறந்ததில்லை. அதுபோல் காதலை அங்கிகரிக்கும்
உள்ளங்களால்தான் காதல் இன்னும் இப்புவியில்
லயித்திருக்கின்றது.
காதல் தோல்வி:
இருவரும்
சேர்ந்து வாழ்வது காதல் அல்ல,
இருவரையும் சேர்த்த காதலை இறுதிவரை
சாகடிக்காமல் வாழ வைப்பதே காதல்
ஆகும். உலகத்திலிருந்து அனைத்திற்கும் எதிர்மறை துருவங்கள் உள்ளன. அதுபோல காதல்
வெற்றிக்கு இருக்கும் எதிர்துருவம்தான் காதல் தோல்வி.
காலமாற்றத்தால்
வரவைத்தல் காதல் தோல்வியல்ல அது
கலியுக தோல்வி. ஆனால் காதலர்களின்
சூழல்கள் எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளால் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொண்டு காதல் நினைவுகளுடன்
வாழ்ந்தவற்றை வழியனுப்பி வாழ்கின்ற காதல் எப்பொழ்தும் தோற்காது.
புறக் காதல்:
காதலுக்கு
சம்மதம் இல்லாத ஈடில்லாத காரணத்தை
கூறி காரணமில்லாமல் பிரிவதே காதல் தோல்வியாகும்
அது புறத்தால் வருவது அதாவது (காதல், பணம்
) என்னும் உயிரற்ற ஜடத்திற்காக உயிரை
விற்பது போல, ஆனால் இதையும் ஒரு
சுகமாகவே பார்க்கிறார்கள் காதல் தோல்வி அடைத்தவர்கள்.
அகக் காதல்:
அகத்தில்
தோல்வி இல்லை ஏனென்றால் அகக்
காதல் அவர் வாழ்வில் நிற்கிறது
அவர் நினைவில் மட்டும்மல்ல, அவரவர் உணர்வில் உயிரில்
கலந்த காதல் வாழ்க்கையின் இறுதிவரை
பயணிக்கின்றது. இது மதிப்புமிக்கது சுகமான நினைவாக்கி
வாழ்வோர் பலருண்டு, சுகமான சுமையாக்கி வாழ்க்கையாக
வாழ்வோர் பலருண்டு. இதை, இறைவனின் தவறாக
நினைப்போரும் உண்டு இறைவனையே தவறாக
நினைப்போரும் உண்டு.
காதல் விஞ்ஞானமா! மெய்ஞானமா:
காதல்
உடலில் தோன்றும் ரசாயனங்களின் வேதி வினை என்கின்றனர்
படித்த விஞ்ஞானிகள் இது வித்தியாசமும் விந்தையும்
கலந்த ஓர் அதிசயம்தான். காதல்
விஞ்ஞானத்திற்கு அப்பாற்ப்ப்ட்ட மெய்ஞானத்தின் பிறப்பிடம் என்று கூருவோரும் உண்டு.
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு.
காதல் எப்பொழுது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் எவர்மீதும்
வரும். உலகத்தின் சர்வாதிகாரி என்ற ஹிட்லருக்கும் ஒரு
காதல் கதை உண்டு. காதல்
அன்பை கடந்த ஓர் அற்புதமான
உணர்வு.
அவ்வுணர்வை
படித்தால், கேட்டால், பார்த்தால் புரித்துக்கொள்ள முடியாது அதை உணர்வால் மட்டுமே
உணர முடியும்.
“ முதல்
காதல் என்பது இருவரும் வெளிப்படுத்தும்
உணர்வுகளை காதலிப்பது முதிர்ந்த காதல் என்பது முன்சொல்லப்பட்ட
உணர்வுகளின் சாட்ச்சியாக வாழ்வது “
காதலின்
முடிவும் தொடக்கமும் ஒரே புள்ளியில் தான்
அடங்குகிறது. காதல் எதுவரை என்பதை
காதலர்களே முடிவுசெய்கின்றனர். காதல் என்பதை நாம்
வாழ்க்கையின் பாகமாய் நினைக்கிறோம் ஆனால்
இயற்கை வாழ்க்கையையே பாகமாக வரையறுத்துள்ளது “! பார்ப்போம்
பயணிப்போம் இம்முடிவில்லா காதலை எதுவரையென்று.
WRITTEN BY YOUTH ICON: NANDHINI GOVINDASAMY
0 Comments