வங்கிப் பணி கனவா விண்ணப்பியுங்க ஐபிபிஎஸ் கிளாரிக்கல் தேர்வுக்கு!

வங்கிப் பணி பெற கனவா படித்துக் கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான அறிவிப்பு படியுங்க. ஐபிபிஎஸ் நடத்தும்  நாட்டிலுள்ள கிளாரிக்கல் பணிகளுக்கான வேலைவாய்ப்பை  பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.


ஐபிபிஎஸ்: 
இண்ஸ்டியூசன் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்சன் எனப்படும் ஐபிபிஎஸ் 1975 முதல் இயங்கி வருகின்றது. இதனை பர்சனல் செலக்சன் சர்வீஸ் என்று 2011 வரை அழைத்து வந்தனர். இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கான தேர்வை நடத்தி தகுதியுடையோரை பணியமர்த்தும் பணியினை செய்கின்றது. ஐபிபிஎஸ் அமைப்பு. முதன்மை மற்றும் முக்கிய,  நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஐபிபிஎஸ்சின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் பணியமர்த்தும். 

பணியின் பெயர்
ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணி
வயது வரம்பு
21 வயது 28
கல்வித் தகுதி
ஏதேனும் பட்டம்,
பணியிடங்கள் எண்ணிக்கை
7275
சம்பளம்
அறிக்கையின் படி
பணியிடம்
இந்தியா முழுவதும்



ஐபிபிஎஸ் அறிவித்துள்ள கிளாரிக்கல் பணியிடங்கள் மொத்தம் 7275 ஆகும். ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணி வாய்ப்பு பெறுவோர் நாடு முழுவதுமுள்ள வங்கிகளில்  பணியாற்ற வேண்டி வரும். 

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் தேர்வானது முதன்மை மற்றும் முக்கிய தேர்வை கொண்டது. மொத்தம் 19 வங்கிகள் ஐபிபிஎஸ்சின்  2018-2019 கிளாரிக்கல் பணிக்கு விருப்பமுள்ளோரை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க இணைந்துள்ளது. 

20 முதல் 28 வயதுள்ளோர்  கிளாரிக்கல் தேர்வினை எழுதலாம். மற்றும் ஏதேனும் ஒரு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

கிளாரிக்கல் தேர்வானது முதன்மை மற்றும் முக்கிய தேர்வின் கீழ் தகுதியுடையோரை தேர்வு செய்யும். 

விண்ணப்பங்களை ஆண்லைனில் செலுத்த வேண்டும்.  பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுதிறனாளிகள்  ரூபாய் 100  விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் போதுமானது ஆகும். 

விண்ணப்பிக்கும் முறை: 
அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையினை தரவிறக்கம் செய்து படிக்க வேண்டும். 

அறிவிக்கையை முழுமையாகப் படித்துபார்த்த பின் விண்ணப்பிக்க தொடங்கலாம். 

ஆன்லைன் விண்ணப்பித்த பெயர், முகவரி போன்ற அடிப்படைத் தகவல்களை தெளிவாக  கொடுத்து அதனை சரிபார்த்து சப்மிட் செய்ய வேண்டும். 

விண்ணப்பங்களை சரிபார்த்து அதனை சப்மிட் செய்த பின் புகைப்படம் மற்றும் அத்துடன் இணைந்த கையெப்பத்தினை சரியான அளவில் அப்லோடு செய்து சரிபார்த்து சப்மிட் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பிய பின் டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டும். 

முக்கிய தேதிகள்: 
ஐபிபிஎஸ் கிளாரிக்கல் தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 18.92017 ஆகும் மற்றும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி  நாள் 10.10.2018 ஆகும். 


Post a Comment

0 Comments