குரூப் 2 தேர்வை ஜெயிக்கனுமா முந்தய ஆண்டு வினாவங்கி படிங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன.   பாடப்புத்தகங்களை வரிசையாக படித்துக் கொண்டிருக்கின்றீருப்பீர்கள்  தொடர்ந்து  முந்தய  ஆண்டுகளின்  வினா-விடைகளை படிக்க   உங்களுக்காக  சிலேட்குச்சி இந்தியா  வழங்குகின்றது.


குரூப் 2 தேர்வில் ஆயிரக்கணக்கான  காலியிடங்கள் இடம்  பெற்றுள்ளன. அவற்றில்  உங்கள்  ரேங் இடம் பெற முயற்சியினை என்று தொடந்து கைக்கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்.

1. ஐபிஆர்ஐ குறிப்பது?
விடை: இந்திய தொழில்துறையை புதுப்பிக்கும் வங்கி

2. களவு பொருளாதார செயல்முறை என்றால் என்ன?
விடை: இந்தியாவின் உற்பத்தி திறன் குறைவு

3. அளிப்பு  அதன் தேவையைத்தானே  உண்டாக்குகின்றது என்று கூறியவர் யார்?
விடை: கீன்ஸ்

4. பாதக வாணிப இருப்புநிலை என்பது?
விடை:  ஏற்றுமதி, இறக்குமதிக்கு குறைவாக இருந்தால்

5. திட்ட விடுமுறை குறைவாக இருக்க காரணம்?
விடை: 1966-1969

6. வாணிப இருப்புநிலை என்பது?
விடை: கண்ணிற்குப் புலனாகும் ஏற்றுமதி இறக்குமதி  இனங்களின் மதிப்பு

7. இந்திய அரசியலில் பொதுநல கோட்பாடு  எதில் அடங்கப் பெறுகிறது?
விடை: அரசு வழிகாட்டு நெறிகோட்பாடு

8. இந்திய குடிமக்களுக்கான ஆதார உரிமைகள் இதில் அடங்கப் பெறுகிறது?
விடை: அரசியலமைப்பின் பாகம் III

9. இந்திய அரசியலமைப்பு  நிர்ணய சபை
விடை: கேபினெட் தூதுகுழுவின்  திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது

10. வரைகுழுவில் எத்தனை உறுப்பினரகள் இருந்தனர்?
விடை: பதினொரு உறுப்பினர்கள்

11. இந்திய அரசியலமைப்பினை திருத்துமுறை?
விடை: தென் ஆப்பிரிக்காவின் அரசியலமைப்பினைப் பின்ப்பற்றியது

12. ஜனாதிபதியின் ஊதியம்
விடை: வருமான வரிக்கு உட்ப்பட்டது

13 . செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு
விடை: ஆங்க்ஸ்ட்ராம்

14நீலப்பச்சை பாசிகள்
விடை: ஒளிசார்பு சுயஜீவிகள்

15. ஓசோன் எனப்படுவது
விடை: புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாகின்றது

16. பஞ்சசீல கொள்கை எங்கு நடை முறைப்படுத்தப்பட்டது ?
விடை: புதுடெல்லி 

17. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் யாரால் வடிவமைக்கப்பட்ட்து?
விடை: ஜவஹர்லால் நேரு

18. கர்நாடகப் போர்கள் இவர்களுக்கிடையே நடைபெற்றது?
விடை:  ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் 

19. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து உறுதியளிக்கப்பட்டது எந்த அறிக்கையில் ?
 விடை: கிரிப்ஸ்

20. சமாதனத் தந்தை எனப் போற்றப்படும் பிரதமர் யார்?
விடை: லால் பகதூர் சாஸ்திரி 

மேலும் படிக்க:


Post a Comment

0 Comments