குரூப் 2 தேர்வுக்கான போர்த்துகீசிய வருகை மற்றும் பொதுஅறிவு குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான வரலாற்று பாடங்களின் குறிப்புகளை இங்கு தொகுத்து அவற்றில் கேட்க வாய்ப்புள்ள கேள்விகளையும் கொடுத்துள்ளோம்.  தேர்வர்கள் இதனை நன்றாக பயன்படுத்தி தேர்வை வென்று உங்கள் கனவு வாயிலை அடையவும்.

இந்தியாவிற்கு வருகை தந்து கடல்வழியை கண்டுபிடித்து  போர்ச்சுகீஸிய  ஆதிக்கம் இந்தியாவில் பரப்பிய பெருமை மாலுமியான வாஸ்கோடகாமாவைச் சேரும். இவர் 1498 ஆம் ஆண்டு, மே மாதம் 17- ஆம் தேதி பிரசித்திப்பெற்ற கள்ளிக்கோட்டை துறைமுகத்தை அடைந்தார்.


சாமரின் அரசரின் உதவியுடன் போர்ச்சுகீஸியர் பல பண்டகசாலைகளை அமைத்து இதனால்  இந்தியாவில் வணிகத் தொடர்பு  ஏற்பட்டது. அதுவரை இந்தியாவின் வணிகத் தொடர்பு கொண்டிருந்த அராபியர்கள் வியாபாரம்  பாதிக்கப்பட்டது.

1497 இல் வாஸ்கோடமா 8 ஆம் தேதி போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் துறை முகத்திலிருந்து மூன்று கப்பல்களுடன்  புறப்பட்டார்.

பெட்ரோ அல்வரல் கேப்ரால்:
கேப்ரால் தலைமையில் கள்ளிக்கோட்டைக்கு அடுத்த கொச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அதனை இந்தியாவின் அடுத்த தலைநகரமாக நிர்ணயித்தனர்.

பிரான்ஸிஸ்கோ- டி- அல்மெய்டா:
கேப்ரலுக்குப் பின்னர் இந்தியாவிற்கு அனுப்ப பட்டார்   எஸ்டவாடகாமா, கோவா, கொச்சி, கண்ணனூர் ஆகிய இடங்களில் பண்டக சாலையை நிறுவினார்.
இந்தியாவின் கடல் வலிமையை எடுத்துரைத்து நீல நிர்க்  கொள்கை வகுத்து கடலாதிக்கத்தைப் பெருக்கினார்.

அல்போன்ஸா-டி-அல்புகர்க்:
அல்போன்சோ அல்புகர்க் வைசிராயாக  அனுப்பபட்டார் 1509இல் இந்தியாவில் போர்த்துகீசிய அதிகாரத்தை நிறுவிய பெருமை இவரைச் சேரும்.

1509 நவம்பர் 5-இல் போர்ச்சுகீசிய வைசியராயாக பதவியேற்றார். கோவாவை முழுமையாக  வைசிராயகாப் பதவியேற்றார். பீஜப்பூர் சுல்தானுடன் போரிட்டு கோவா முழுமையாகப் பிடித்தார். கோவாவை இந்தியாவின் போத்துகீசிய தலைநகராக்கினார்.
 மேலும் இவர் சதியை ஒளித்தார். இந்திய பெண்களை  திருமணம் செய்யும் முறையை அங்கிகரித்தார்.

  நினோ-டா.சுன்கா:
போர்த்துகீசிய வைசிராயாக வந்த  நியமிக்கப்பட்ட நினோ-டா-சுன்கா கோவாவிலிருந்து கொச்சியை போத்துகீசிய தலைநகரை மாற்றினார். 1530இல்  டையூவை கைப்பற்றினார். 1535இல் டாமன்  கைப்பற்றினார்.

மிகப் பிரபலமான போர்த்துகீசிய மதகுரு சேவியர் இந்தியாவிற்கு போர்த்துகீசிய கவர்னர் மார்டின் அல்போன்சோ டி-சோஷாவுடன் வருகை புரிந்தார்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசிய   ஆதிக்கம் 1631இல்  காசிம் கான் முகலாய ஆட்சிகாலத்தில்  நிறுத்தப்பட்டது. மேலும் பிரிட்டிஸிடம் ஹார்மஸ் பகுதி பகுதியை 1622இல் பரிகொடுத்தனர். மராத்தியர்கள் போத்துகீசியர்களிடம் இருந்து சால்செட், பாசீன் தீவுகளை 1739இல்  கைப்பற்றினார்கள். போர்த்துகீசியர்கள் கோவாவை 1961 வரை நிர்வகித்து வந்தனர். டச்சு நிர்வாகம் போர்த்துகீசியரின்  கடல் ஆதிகத்தை முழுவதுமாக தடுத்தது.

போர்த்துகீசிய அரசர் 1661 மும்பையை தனது தங்கைக்கு சீதனமாக பிரிட்டிஸின் இரண்டாம் சார்லஸ்க்கு வழங்கினார். போர்த்துகீசியர்கள் வாசனைப் பொருட்களின் வியாபாரத் தளமாக இருந்தனர். மிளகு சிறந்த வியாபார பொருளாக தனிபெரும்   அளவில் நடத்தி வந்தனர்

வினாவிடை: 
1. போர்த்துகீசிய அரசர் எந்த  நாட்டு அரசருக்கு  மும்பையை தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்தார்?

2. மராத்தியர்கள் போர்த்தூகீசியர்களிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகள் யாவை?

3. சதியை ஒழிக்க ஆதரவு வளங்கிய போர்த்துகீசிய அரசர் யார்?

4.  கடல் ஆதிக்கத்தை பெருக்க நீலநிற கொள்கை வகுத்தவர் யார்?

5. போர்த்து கீசியர் காலத்தில் எந்த இரண்டு பகுதிகள் இந்தியாவின் தலைநகரமாக கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க:
 குரூப் 2 தேர்வுக்கான கடந்த  டிஎன்பிஎஸ்சியின் கேள்வி தொகுப்பு!

Post a Comment

0 Comments