பள்ளி கல்லுரி மாணவர்களே உங்களுக்கான கல்வி உதவித்தொகை!

மாணவர்களுக்கான கல்வி என்பது மிகவும் அவசியம். மேலும் அவசியமான கல்வியை பெற சில தடங்கல்கள் ஏற்படும் பொழுது கலங்காது  முயற்சிக்க வேண்டும். தடைகளை தாண்டி படிக்க வேண்டுமென்ற உறுதி இருப்பின் உங்களுக்கான உதவி நிச்சயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை குறித்து தகவல்களை  வழங்கும் சிலேட்குச்சி தளத்தில் படித்து பயன் பெற வேண்டும்.
ஹெச்டிஎப்சி வழங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், மேலும் கல்வியை தொடர சிக்கல் உள்ள மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. 



 தகுதி:
பொருளாதார வசதியற்ற  ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  பள்ளி மாணவர்கள் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம். 

 ஹெச்டிஎப்சி வங்கி திட்டம்:
கல்வி உதவித்தொகையானது ஹெச்டிஎப்சி எஜூகேசனல் கிரைசஸ் ஸ்காலர்ஷிப் மூலம்  வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி  பெறும் மாணவர்களுக்கு வருடம்  ரூபாய் 25000 வரை தொகை கிடைக்கும்.

2018 ஆம் ஆண்டுக்கான ஹெச்டிஎப்சி வங்கியின் கல்வி உதவித்தொகை பெற விதிமுறைகள்: 
பள்ளி/ கல்லுரி  இயக்குநர்கள் அல்லது முதல்வர்களின் கையெழுத்திடப்பட்ட மதிபெண் பட்டியல்கள்,
கல்வி உதவித்தொகை பெறும்  மாணவர்களின் முகவரிக்கான சான்றிதழ் குறிப்புகள்,
மருத்துவ சான்றிதழ் (ஏதேனும் நோய் இருப்பின்),
பகுதி நேரம் வேலை பார்க்கும் மாணவர்கள் எனில் சம்பள  ரசீது,
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிபெண் பட்டியல்கள்,
வருமான வரி சான்றிதழ் குறித்த சுய கையெப்பத்துடன் இணைந்த ஒப்புதல் அத்துடன் வருமான சான்றிதழ்கள்,
இவையனைத்தும் மாணவர்கள்  இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

Post a Comment

0 Comments